ஈரோட்டில், விஜய் பிரசாரத்திற்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்து அதற்கான உறுதி மொழி பிரமாண பத்திரம் (affidavit) இன்று மாலைக்குள் வழங்க போலீசார் அறிவுறுத்தியிருந்த நிலையில், உறுதி மொழி பத்திரத்தை தவெக நிர்வாகிகள் வழங்கினர். நிபந்தனைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தவெக தலைவர் விஜய் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சரளையில் நாளை மறுநாள் 18.ம் தேதி மக்கள் சந்திப்பு பிரசார நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கிய காவல்துறையினரின் நிபந்தனைகள் இதோ...
சமார்ப்பித்துள்ள விபரங்களினை கவனமுடன் பரிசீலனை செய்து, 18.12.2025-ஆம் தேதி காலை 11.00 மணி முதல் மதியம் 13.00 மணி வரை பெருந்துறை காவல் நிலைய சரகம், மூங்கில்பாளையம் கிராமத்தில் உள்ள விஜயபுரி அம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான சர்வே எண்.91/1ஏ மற்றும் 103ல் 16 ஏக்கர் இடத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பாக பிரச்சார வாகனத்தில் உரையாற்றுவதற்கு கீழ்க்கண்ட விதிமுறைகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க: விஜய்க்கு விதிக்கப்பட்ட 84 நிபந்தனைகள்!! கறார் காட்டும் ஈரோடு போலீஸ்! பின்னணியில் யார்?!
நிகழ்ச்சி நடத்தும் இடம், நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்கள் பாதுகாப்பு சம்மந்தமாக கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள்.
1. தேசிய நெடுஞ்சாலையின் (NH S44) சர்வீஸ் ரோட்டில் இருந்து வட புறம் சுமார் 250 அடி தாரம் இடைவெளி விட்டு நிகழ்ச்சிக்கான தடுப்புகள் (Barriecade) அமைக்கப்பட வேண்டும்.
2.தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்க சீரான போக்குவரத்தினை உறுதி செய்ய தேசிய நெடுஞ்சாலையில் தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் நிற்பதை தவிர்ப்பதற்காக சர்வீஸ் சாலையை ஒட்டி வடபுறம் பார்வை தடுப்புகள் (View Cutters) அமைக்கப்படவேண்டும்
3. பிரச்சார வாகனத்தில் முக்கிய நபர்கள் மட்டுமே பரப்புரையின் போது இருக்க வேண்டும். பிரச்சார வேனை சுற்றி நான்கு புறமும் வேனுக்கும் பொதுமக்களுக்கும் இடையே சுமார் 50 அடி தூரம் (sterile zone) இடைவெளி இருக்க வேண்டும்.
4 நிகழ்ச்சி நடத்தும் இடத்தில் பிரச்சார வாகனம், VIP Boxes, பெர்கள் Boxes, இதர Boxes, உள் நுழையும் மற்றும் வெளியேறும் வழிகள் (Entry and exit points, gang way) குறித்த தெளிவான வரைபடம் (Blue print), காவல்துறை வசம் சமர்ப்பிக்கப்படவேண்டும். VIP Boxes-அடுத்ததாக பெண்களுக்கு என்று தனியாக அமைக்கப்பட்டிருக்கவேண்டும். தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை ஊடகங்களுக்கு இட வசதி எங்கே அளிக்கப்பட்டுள்ளது என்ற விபரம் Blue print-ல் குறிப்பிட்டிருக்க வேண்டும். Boxes-
5. நிகழ்ச்சியின் போது பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களை ஒவ்வொரு Box-லும் 80% மட்டுமே அனுமதிக்கப்படவேண்டும். (உதாரணமாக ஒரு Box-ல் 500 பேர் நிற்க முடியும் என்றால் 400 பேர் மட்டுமே Box-க்குள் அனுமதிக்கப்படவேண்டும்.)
6. பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் நிழ்ச்சிக்கு அனுமதிக்கப்படும் போதும் வெளியேற்றப்படும் போதும் தள்ளுமுள்ளு இல்லாமல் இடைவெளி விட்டு வரிசையாக மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.
7. நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுக்கு ஒவ்வொரு Box-லும் குடிநீர்வசதி செய்து தரப்படவேண்டும்.
8. தீயணைப்பு, மருத்துவ குழுக்கள், அவசரகால ஊர்தி நிறுத்துமிடம், நடமாடும் கழிவறை வாகனம் நிறுத்துமிடம், PA SYSTEM, LED திரைகள் வைக்கப்படும் இடங்கள் குறித்து Bluc print-ல் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
9. நிகழ்ச்சிக்கு வரும் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எண்ணிக்கை தாங்கள் மனுவில் குறிப்பிட்டதை விட மிகாமல் இருக்க வேண்டும்.
10. நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான அளவில் மருத்துவ குழுக்களும், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஏற்பாடு செய்யவேண்டும். மேலும், எத்தனை மருத்துவ குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மற்றும் பாராமெடிக்கல் பணியாளர்கள் எத்தனை பேர் பணியமர்த்தப்பட உள்ளனர் என்ற விபரம் காவல்துறைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
11. முதலுதவி சிகிச்சை செய்யக்கூடிய மருத்துவர் மற்றும் உதவியாளர் பெயர் பட்டியல் விபரங்கள் அலைபேசி எண்ணுடன் காவல் துறை வசம் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
12. ஏதேனும் மருத்துவ அவசர நிலை ஏற்படும் நிலையில் சிகிச்சை பெறுவதற்கு அருகாமையில் த்தனை மருத்துவமனைகள் தயார் செய்யப்பட்டுள்ளது என்ற விபரம் காவல் துறை வசம் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
13. நிகழ்ச்சி நடைபெறும் போது அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க தீ பாதுகாப்பு நடவடிக்கை சான்றிதழ் (Fire Safety Certificate) பெற்றும் நிகழ்ச்சி நடை பெறும் இடத்தில் தீயணைப்பு வாகனம் நிறுத்துவதற்கு முறையாக அனுமதி பெற்ற கடிதத்தினை காவல் துறை வசம் சமர்ப்பிக்கவேண்டும். ஒலிப்பெருக்கிகள், LED திரைகள், ஆகியவற்றிற்கு அதற்கான உறுதித்தன்மை சான்று (Electrical stability Certificate) அளிக்கப்படவேண்டும். கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி பயன்படுத்த கூடாது.
14. அவசர நிலைகளில் தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட்டத்திற்கு இடையே வர தனி வழி விடப்படவேண்டும்.
15. நிகழ்ச்சிக்கு எவ்வளவு CCTV கேமராக்கள் மற்றும் PA SYSTEM, LED திரைகள் அமைக்கப்பட உள்ளது என்பது பற்றிய விபரம் காவல் துறை வசம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். போதுமான CCTV கேமராக்கள் அமைத்து நிகழ்ச்சி நடைபெறும் இடம் முழுவதையும் கண்காணிப்பதற்கு ஒரு கண்காணிப்பு அறை ஏற்பாடு செய்யவேண்டும். நிகழ்ச்சி நடைபெறும் இயம், வாகனங்கள் நிறுத்தும் இடம் ஆகியவற்றினை Drone Camera வழியாக கண்காணிக்க, கண்காணிப்பு அறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதற்கான அனுமதியை மாவட்ட நிர்வாகத்திடம் பெற்றிருக்கவேண்டும். Drone Camera Operator பற்றிய விபரங்கள் மற்றும் நிகழ்ச்சியை முழுமையாக வீடியோ பதிவு செய்து காவல்துறை வசம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
16. தனியார் ஊழியர்கள், தன்னார்வலர்கள் (Volunteers) எத்தனை பேர் பாதுகாப்புக்காக நிகழ்ச்சியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்ற விபரம் காவல் துறைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். நிகழ்ச்சி முடிந்த பின்னர் கூட்டத்தினர் கலைந்து செல்லும் வரையிலும் வாகனங்கள் பார்க்கிங் பகுதியில் இருந்து முழுவதும் வெளியேறும் வரையிலும் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உடனிருந்து வரிசைப்படுத்தி போக்குவரத்திற்கு இடையூறின்றி அனுப்பி வைக்க வேண்டும்.
17. நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு பொதுமக்கள், தொண்டர்கள் வெகுநேரத்திற்கு முன்பு வருவதை தவிர்த்து குறிப்பிட்ட நேரத்தில் வருவதையும், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் நிகழ்ச்சிக்கு வருவதை தவிர்க்கும் விதமாக, முன்னரே தொலைக்காட்சி, செய்தித்தாள், சமூக ஊடகங்கள் மூலமாக தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்படவேண்டும்.
18. பட்டாசு, ஆயுதங்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் எடுத்துவர் அனுமதி இல்லை. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். (பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை).
19.நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகிலோ, முக்கிய நபர்கள் வரும் வழியிலோ மின்கம்பம், மரங்கள் உயரமான கட்டிடங்கள் விளம்பர பதாகைகள் ஆகியவற்றின் மீது பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் ஏறி நிற்க கூடாது. அதை தாங்களே உறுதி செய்யவேண்டும்.
20. காவல் துறை கேட்டுக்கொள்ளும் பட்சத்தில் பாதுகாப்பு சம்மந்தமான கட்டுமான பணிகள் மற்றும் ஏனைய பிற வசதிகள் செய்து கொடுக்கவேண்டும்.
21. நிகழ்ச்சி நடத்தும் இடத்திற்கு தீயனைப்பு துறை மற்றும் ஜெனரேட்டர் மூலம் பெறப்படும் மின்சாரம், மின் சாதனங்கள் மற்றும் மின் விளக்குகள் ஆகியவற்றின் பாதுகாப்பு தன்மை குறித்து பொதுப்பணி துறை மின் பொறியாளரிடம் சான்றிதழ் பெற்று 17.12.2025-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆ) நிகழ்ச்சி நடத்தும் நேரம் சம்மந்தமாக கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள்
1. தாங்கள் பார்வை 3-ல் தெரிவித்தவாறு நிகழ்ச்சியானது 18.12.2025-ம் தேதி காலை 11.00 மணி முதல் மதியம் 13.00 மணிக்குள் கட்டாயம் முடிக்கப்படவேண்டும்.
2. நிகழ்ச்சியானது காலை 11.00 மணி முதல் மதியம் 13.00 மணிக்கு முடிவடைவதால் கடுமையான வெயில் நேரம் என்பதால் நிகழ்ச்சி நடத்தும் இடத்தில் கண்டிப்பாக மேற்கூரை அமைக்கப்பட வேண்டும். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தாங்களே பொறுப்பாவீர்கள்.
3. தங்களின் கட்சியின் தலைவர் வரும் நேரம், புறப்படும் நேரம் ஆகியவற்றை முன்பே தெரியப்படுத்தவேண்டும்(Minute to minute program). அவர் பிரச்சார வாகனத்திற்கு எந்த வழியில் வருவார் என்ற விபரத்தை முன்பே தெரிவிக்கவேண்டும்.
இ) நிகழ்ச்சி நடத்தும் இடத்திற்கு VIP வரும் Route சம்பந்தமாக கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள்.
1. VIP வாகனத்தை தொடர்ந்து அனுமதிக்கப்பட்ட 10 வாகனங்கள் தவிர வேறு வாகனங்கள் பின் தொடர்ந்து வரக்கூடாது. மேலும் அனுமதிக்கப்பட்ட 10 வாகனங்களின் பதிவு எண் மற்றும் அதில் வரும் நபர்களின் முழுமையான விபரங்கள் காவல்துறை வசம் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
2. வரும் வழியில் எந்த இடத்திலும் வரவேற்பு, Road Show, ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி இல்லை.
3. நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு VIP வருவதற்கான மாற்று வழித்தடம்(contingency route) பற்றிய விபரம் தெளிவான வரைபடத்துடன் காவல்துறை வசம் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
ஈ) நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் வரவேண்டிய பாதை(Route) மற்றும் வாகனங்களை நிறுத்தும் இடம் (Parking):
1. நிகழ்ச்சிக்கு மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் இருந்து எத்தனை வாகனங்களில் தொண்டர்கள், பொதுமக்கள் வருகிறார்கள், அந்த பகுதி பொறுப்பாளர்கள் பற்றிய விபரம் அலைபேசி எண்ணுடன் காவல்துறை வசம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
2. நிகழ்ச்சிக்கு சேலம் 10 கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலை வழியாக வருபவர்கள் சர்வீஸ் ரோடு வழியாக IRTT பாலத்தின் கீழ் வலது புறம் திரும்பி சீனாபுரம் வழியாக வாகன நிறுத்தும் இடத்திற்கு செல்லவேண்டும்.
3. நிகழ்ச்சிக்கு கோவை to சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக வருபவர்கள், கள்ளியம்புதூர் சர்வீஸ் ரோடு வழியாக விஜயமங்கலம் சென்று வாகன நிறுத்தும் இடத்திற்கு செல்லவேண்டும்.
4. நிகழ்ச்சிக்கு வரும் வாகனங்கள் பழுதாகி சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நிற்பதை தவிர்க்கும் பொருட்டு போதுமான recovery vehicle நிறுத்தி வைக்க வேண்டும்.
5. நிகழ்ச்சிக்கு வரும் கட்சி தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் வாகனங்கள் நிறுத்தும் இடம் செல்ல போதுமான அறிவிப்பு பலகைகள் (flexes, direction boards) காவல் துறை கோரும் இடத்தில் வைக்கப்படவேண்டும். வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் போதிய PA SYSTEM, அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட வேளண்டும். மேலும் தீயணைப்பு வாகனங்கள் (Fire service) நிறுத்தி வைக்கப்படவேண்டும்.
6 நிகழ்ச்சிக்கு சிக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறது. மீறும் பட்சத்தில் வாகன ஓட்டிகள் மற்றும் வாகனங்கள் மறுபிடிசில் நடவடிக்கை எடுக்கப்படும்.
7. நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்தின் தென்புறம் செல்லும் கோலை To சேலம் தேசிய நெடுஞ்சாலையானது மற்ற மாநிலங்களை இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலை ஆகும். ஒரு மணி நேரத்திற்கு குறைந்த பட்சம் சாலையின் இரு மார்க்கங்களிலும் சுமார் 2000 வாகனங்கள் பயணிக்கக்கூடியதாகும். ஆகையால் மநாட்டிற்கு வரு காவல் துறையின் அறிவுரைகளை சரியாக பின்பற்றி நடக்காமல், வாகனங்களை போக நிறுத்தத்தில் நிறுத்தாமல் ஆங்காங்கே சாலை ஓரங்களில் நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்களில் நிறுக்கினால் இதேசிய மருத்துவ உயர் சிகிச்சைக்காக கோயமுத்தூர் செல்லும் அவசர ள்ளும். இத பாதிப்பை ஏற்படுத்தும். வருபவர்களுக்கு முன்கூட்டியே மேற்படி அறிவுரைகள் வழங்கி வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்திய அறிவுறுத்தப்படுகிறது.
R) பொதுவான விதிமுறைகள்:
1. பொது சொத்திற்கு ஏதும் சேதாரம் ஏற்படுத்தினால், நிகழ்ச்சியின் பொறுப்பாளர் மீது சுட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
2. உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து அனுமதி பெறாமல் பொது இடங்களில் பேனர்கள். கொடிகள் மற்றும் அலங்கார வளைவுகள் ஆகியவை அமைக்கப்படக்கூடாது.
3 ஈரோடு ஊாக உட்கோட்ட காவல் எல்லைக்குள் காவல் சட்டப்பிரிவு 30(2)-ன் செயல்முறை ஆணைகள் அமலில் உள்ளதை தாங்கள் அறிவிர். எனவே, காவல்துறை விதிகளுக்கு உட்பட்டு சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும்"
மேற்படி நடைமுறைகளை பின்பற்றுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எழுத்து மூலம் உறுதி மொழி பிரமாண பத்திரம்(fidavit) 16.12.2025-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும். அதில், விதிமுறை மீறல் ஏற்பட்டால் பொறுப்பேற்கக்கூடிய அமைப்பாளர்களின் பெயடும் அதில் குறிப்பிட்டிருக்கவேண்டும்
நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக அவ்வப்போது காவல் துறையினர் தெரிவிக்கும் அறிவுரைகள், விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்கவேண்டும்.
மேலே கண்ட நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் பிரச்சார நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களே முழு பொறுப்பாவார்கள் மற்றும் நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்ட அனுமதி இரத்து செய்யப்படும் என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
இதையும் படிங்க: ஈரோட்டில் மக்கள் சந்திப்பு... தவெக தலைவர் விஜய்க்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் என்னென்ன?