கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவி கொளப்பாக்கம் கிராமத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு என கடந்த நான்கு ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அதற்கான பணிகள் குறித்து எடுத்துரைத்து பேசினார் அதேபோலத்தான் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கிறார் என்று கூறினார்.

பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, யார் யாரோ என்னென்னமோ பேசுனா ஒருத்தன் வந்து யார் கூட சேர்வது என்று தெரியாமல் சேர்ந்துகிட்டு இருக்கான், அவன் சொல்றான் எடப்பாடி பழனிச்சாமி, அடுத்தது நாங்கதான்னு சொல்றான் அடுத்தது அவங்க தான் கடந்த 10 ஆண்டுகளில் 11 தேர்தல்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
இதையும் படிங்க: போர் பதற்றம்.. தன்னை சந்திக்க வர வேண்டாம்..! கழகத் தொண்டர்களுக்கு இபிஎஸ் அன்பு கட்டளை..!

ஆகையால் அடுத்த அவங்க தான் தோல்வியடைய போறாங்க என்று எடப்பாடி பழனிச்சாமியையும் அதிமுக பாஜக கூட்டணி குறித்தும் முன்னாள் அமைச்சர் பொன்முடி காட்டமாக விமர்சனம் செய்தார்.

தொடர்ந்து பேசிய அவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞர் ஆட்சியில் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது பின்னர் ஆட்சிக்கு வந்த அதிமுக அதனை நிறுத்தியது தற்போது மீண்டும் திமுக ஆட்சி வந்த உடன் விவசாயிகளுக்கு மீண்டும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார். இதற்கு சோசியல் மீடியாவில் கடும் விமர்சனம் கிளம்பியுள்ளது. இப்படி வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசியதால் தானே கட்சி பொறுப்பு, அமைச்சர் பதவி என இரண்டும் போச்சு. அப்படி போயும் இன்னும் நீங்க திருத்தவில்லையா? என அதிமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: குனிந்து கும்பிடு போட்டு ஆண்டவர் இபிஎஸ்.. அண்ணன் ஆட்சியை புகழ்ந்து தள்ளிய தங்கை..!