காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகங்களாக விளங்கும் ராகுல் காந்தியும் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் அரசியலில் எப்போதும் ஒற்றுமையாகவே செயல்பட்டு வருகின்றனர். வயநாடு தொகுதியில் பிரியங்காவை போட்டியிட வைத்து ராகுல் உழைத்தார். பா.ஜ.க. தரப்பில் ராகுலுக்கு எதிராக விமர்சனங்கள் எழும்போதெல்லாம் பிரியங்கா கேடயமாக நின்று பதிலடி கொடுத்து வருகிறார்.
பார்லிமென்ட் குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் போது ராகுல் திடீரென ஜெர்மனி சென்றது பெரும் பேசுபொருளானது. இதற்கு பிரியங்கா, "பிரதமர் மோடி ஆண்டுக்கு பாதி நாட்கள் வெளிநாட்டில் இருக்கும் போது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் செல்லக் கூடாதா?" என்று பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். "ராகுலுக்கும் பிரியங்காவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அதனால்தான் ராகுல் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார்" என்று அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தம்பி… நீ கீழ இறங்குனா தான் முத்தம் கொடுப்பேன்… ஈரோட்டில் மாஸ் காட்டும் விஜய்….!

ரவ்நீத் பிட்டு கூறியதாவது: லோக்சபாவில் ராகுலும் பிரியங்காவும் ஆற்றிய உரைகளை ஒப்பிட்டு காங்கிரஸார் சிலர் விமர்சனம் செய்துள்ளனர். 20 ஆண்டுகளாக எம்.பி.யாக உள்ள ராகுலுக்கு இந்த ஒப்பீடு பிடிக்கவில்லை. இதனால் குடும்பத்துக்குள் சண்டை ஏற்பட்டது. அதன் காரணமாகவே ராகுல் தற்போது வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த ஆண்டு வரை காங்கிரஸில் இருந்த ரவ்நீத் சிங் பிட்டு, லோக்சபா தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க.வில் இணைந்தார். தற்போது மத்திய இணை அமைச்சராக உள்ளார். அவரது இந்தக் கருத்து காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் - பிரியங்கா இடையே ஒற்றுமைதான் என்று காங்கிரஸார் தரப்பில் தெரிவிக்கப்படும் நிலையில், ரவ்நீத் பிட்டுவின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திமுகவை எதிர்க்க பாஜக முக்கியம்! அதிமுகவிடம் கறார்! முக்கிய தொகுதிகளை கேட்டுப்பெற திட்டம்!