தமிழகத்தில் இன்னும் 10 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், பணி நிரந்தரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைக் கோரி போராடி வந்த தூய்மை பணியாளர்களை தமிழ்நாடு அரசு நள்ளிரவில் குண்டுகட்டாக கைது செய்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூய்மை பணியாளர்களின் நலனுக்காக இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 6 புதிய திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தாலும், இந்த கைது சம்பவத்தை எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் கடுமையாக கண்டித்து வருகின்றனர்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களுடன் 12 கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. ஆனால், பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசின் கதவுகள் பேச்சுவார்த்தைக்கு எப்போதும் திறந்திருப்பதாகவும், தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டுமெனவும் அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: #BREAKING நள்ளிரவில் குண்டுக்கட்டாக கைது.. தூய்மை பணியாளர்களை தனி இடத்தில் அடைத்து வைத்து மிரட்டல்.. தற்போதைய நிலவரம் என்ன?
அமைச்சர் மேலும் கூறுகையில், தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக அரசு பல திட்டங்களை அறிவித்துள்ளதாகவும், பணி நிரந்தரம் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அவற்றின் முடிவுக்கு பின் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இறுதியில், அரசு உங்கள் மீது வைத்திருக்கும் அக்கறையை புரிந்துகொண்டு, பணிக்கு திரும்ப வேண்டும். அரசின் கதவுகள் பேச்சுவார்த்தைக்கு எப்போதும் திறந்தே இருக்கிறது என்று தூய்மைப் பணியாளர்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை வைத்தார்.
இதையும் படிங்க: தொடர் போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள்.. இன்று நடந்த பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி..!!