வரும் தேர்தலில் அதிமுக என்ற கட்சி எதிர்கட்சியாக கூட இருக்கக்கூடாது என்பதே நமது குறிக்கோள் திமுக ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தல் குறித்து தேனி திமுக வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று தேனியில் நடைபெற்றது. பழனிச்செட்டிபட்டி யில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேனி எம்பி தங்க தமிழ்செல்வன், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி , நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு 2026 சட்ட மன்ற தேர்தலில் பணியாற்றுவது குறித்து வடக்கு மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: டாஸ்மாக் ஊழல் டு சொத்து குவிப்பு வழக்கு.. திமுகவுக்கு 2026ல் காத்திருக்கும் ட்விஸ்ட்.. அதிமுக மாஜி அமைச்சர் அதிரடி..!

அதிமுக என்ற கட்சி எதிர்கட்சியாக கூட இருக்கக்கூடாது என்பதே நமது குறிக்கோள் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில் இந்த நான்கு ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களும் ஏதோ ஒரு வகையில் பயன் அடைந்துள்ளது இந்த தேர்தல் நமக்கு பெரிய சவால் திமுக ஆட்சியில் அமர்ந்த பின்பு இரண்டாவது முறை ஆட்சி அமைக்காது என்று சொல்கிறார்கள்

நான் கூறுகிறேன் இந்ததேர்தல் மட்டுமல்ல இதற்கு அடுத்து வரும் தேர்தலில் திமுக தான் தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கும். வரும் தேர்தலில் அதிமுக என்ற கட்சி எதிர்கட்சியாக கூட இருக்கக்கூடாது என்ற நிலையை இந்த தேர்தலில் நம் குறிக்கோள் மற்றும் குறிக்கோள் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: வக்கு இருந்தா "யார் அந்த தம்பி"னு சொல்லுங்க.. ஸ்டாலினை டார் டாராக கிழித்த இபிஎஸ்..!