சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) திமுக அரசுக்கு கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டு தமிழக அரசியல் களத்தை சூடேற்றியுள்ளார். “திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதாளத்திற்குப் போய்விட்டது. இன்னும் நான்கே மாதங்கள்தான் ஆட்சி இருக்கிறது… அந்த நான்கு மாதங்களிலாவது சட்டம் ஒழுங்கின் மீது கவனம் செலுத்துங்கள்!” என்று இபிஎஸ் கொதித்தெழுந்து தாக்கியுள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நடந்த கொடூர சம்பவங்களை ஒவ்வொன்றாக பட்டியலிட்ட இபிஎஸ், “கும்பகோணம் அருகே பள்ளி மாணவர்கள் மோதலில் +2 மாணவன் கொலை, சீர்காழியில் எடை தராசால் காய்கறி வியாபாரி கொலை, தென்காசியில் சொத்து தகராறில் விவசாயி வெட்டிப் படுகொலை, சேலம் தோப்பூரில் இளைஞரின் தலை துண்டிக்கப்பட்டு கொலை, நாகர்கோவிலில் பட்டப்பகலில் பெண்ணை வழிமறித்து திருட முயற்சி… இதுதான் ஸ்டாலின் மாடல் ஆட்சியா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“பள்ளி மாணவர்களிடம் படிப்பு வளர வேண்டும்… ஆனால் ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை போக்கு வளர்கிறது. விவசாயி, வியாபாரி, பெண், இளைஞர்… யாருக்கும் பகல் இரவு என்று பாதுகாப்பே இல்லை. இது அவலத்தின் மொத்த உருவம்” என்று கடுமையாகச் சாடினார் இபிஎஸ். “சட்டம் ஒழுங்கு சீர்கெட்டதால்தான் தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் சீர்கெட்டு இருக்கிறது. சுய விளம்பரத்தில் திளைக்கும் பொம்மை முதல்வர் இதை எப்போது உணரப் போகிறார்?” என்று கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலினின் Show-off ஆட்சி!! Back Off நிறுவனங்கள்! எடப்பாடி கிடுக்குப்பிடி!
“இன்னும் நான்கு மாதங்கள்தான் ஆட்சி இருக்கிறது… அந்த நான்கு மாதங்களிலாவது சட்டம் ஒழுங்கின் மீது கவனம் செலுத்துங்கள்!” என்று திமுக அரசை வலியுறுத்தியுள்ளார் இபிஎஸ். 2026 தேர்தல் நெருங்குவதால், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஆயுதமாக்கி திமுகவைத் தாக்கும் அதிமுகவின் திட்டம் தெளிவாகத் தெரிகிறது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இபிஎஸ் அறிக்கை இப்போது அந்த விவாதத்தை மேலும் சூடேற்றியுள்ளது.
இதையும் படிங்க: எல்லா வருஷமும் இதே பிரச்னை!! ஓட்டவே முடியாத இலவச சைக்கிள்!! பள்ளி மாணவர்கள் அப்செட்!