• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, November 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    துணை ஜனாதிபதி தரிசனத்தின்போது மின்தடை! மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இளநிலை பொறியாளர் சஸ்பெண்ட்!

    கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளிக்கத் தயாரானபோது திடீரென மின்சாரம் தடைபட்டது. சிறிது நேரத்தில் மின்சாரம் மீண்டும் வந்த நிலையில், தொடர்ந்து இருமுறை மின்தடை ஏற்பட்டு சீரானது.
    Author By Pandian Sun, 01 Nov 2026 10:14:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madurai Meenakshi Temple Power Cut: Junior Engineer Suspended After Vice President Visit

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தபோது ஏற்பட்ட மின்தடை விவகாரத்தில், கோவிலின் இளநிலை பொறியாளர் ஜானகிராமன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பணியில் கவனக்குறைவாகச் செயல்பட்டதாகக் கூறி, 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனி வேல்ராஜன் உத்தரவிட்டுள்ளார்.

    மீனாட்சி அம்மன் கோவிலில் துணை ஜனாதிபதி தரிசனம்!

    துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் மாலை சுமார் 5.30 மணிக்கு வருகை தந்தார். அவருடன் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், அமைச்சர் ஜெகதீசுவரி, மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.

    இதையும் படிங்க: மது பழக்கத்தை கண்டித்த வளர்ப்புத் தந்தை! அரிவாளால் வெட்டிக் கொன்ற மகன்! சோழவந்தானில் அதிர்ச்சி சம்பவம்!

    கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனி வேல்ராஜன், கோவில் இணை ஆணையர் செல்லத்துரை ஆகியோர் அவர்களை வரவேற்றனர். தொடர்ந்து பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு துணை ஜனாதிபதி கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டார்.

    மின்தடை ஏற்பட்டதால் பரபரப்பு!

    கோவிலில் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேசுவரர் சன்னதிகளில் துணை ஜனாதிபதி சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டார். அவருக்கும் ஆளுநர் அர்லேகருக்கும் தீபாராதனை காட்டப்பட்டது. தரிசனத்தை முடித்த பின்னர் இருவரும் பொற்றாமரைக் குளத்தின் அருகே நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    இதற்கிடையே, கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளிக்கத் தயாரானபோது திடீரென மின்சாரம் தடைபட்டது. சிறிது நேரத்தில் மின்சாரம் மீண்டும் வந்த நிலையில், தொடர்ந்து இருமுறை மின்தடை ஏற்பட்டு சீரானது. துணை ஜனாதிபதியின் வருகையின்போது ஏற்பட்ட இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    CPRadhakrishnan

    ஜெனரேட்டரை நிறுத்தியபோது மின்தடை ஏற்பட்டதாக விளக்கம்!

    இந்தச் சம்பவம் குறித்து கோவில் நிர்வாகத்தினர் விளக்கம் அளித்தனர். துணை ஜனாதிபதி தரிசனத்தின்போது மின்தடை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, வழக்கமான மின்சாரம் இருந்தபோதிலும் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.

    துணை ஜனாதிபதி கோவிலிலிருந்து வெளியேறிய பிறகு ஜெனரேட்டர் நிறுத்தப்பட்டு, மீண்டும் வழக்கமான மின்சார விநியோகத்திற்கு மாற்றப்பட்டபோது மின்தடை ஏற்பட்டதாகவும், சில நொடிகளிலேயே மின்சாரம் திரும்பியதாகவும் நிர்வாகத்தினர் விளக்கமளித்தனர்.

    இளநிலை பொறியாளர் ஜானகிராமன் சஸ்பெண்ட்!

    இந்த நிலையில், துணை ஜனாதிபதியின் வருகையின்போது ஏற்பட்ட மின்தடை தொடர்பாக கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பணியில் கவனக்குறைவாகச் செயல்பட்டதாகக் கூறி, கோவிலின் இளநிலை பொறியாளர் ஜானகிராமன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    மேலும், இந்த விவகாரம் தொடர்பாக 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனி வேல்ராஜன் ஜானகிராமனுக்கு உத்தரவிட்டுள்ளார். துணை ஜனாதிபதி வருகையின்போது ஏற்பட்ட மின்தடை விவகாரம் தற்போது கோவில் பணியாளர் மீதான நடவடிக்கை வரை சென்றுள்ளது.

    இதையும் படிங்க: சோற்றில் முழு பூசணிக்காயை மறைப்பதா.? மீனாட்சியம்மன் கோவிலில் மின்வெட்டு.! வெளுத்து வாங்கிய TTV தினகரன்.!

    மேலும் படிங்க
    முரசு புயல் எதிரொலி! முதல்வர் விஜய்க்கு போன் போட்ட சந்திரபாபு நாயுடு! தமிழகத்திடம் அவசர உதவி கேட்ட ஆந்திரா!

    முரசு புயல் எதிரொலி! முதல்வர் விஜய்க்கு போன் போட்ட சந்திரபாபு நாயுடு! தமிழகத்திடம் அவசர உதவி கேட்ட ஆந்திரா!

    தமிழ்நாடு
    திமுக துரைமுருகன் இல்ல விழாவில் சமஸ்கிருத மந்திரம்.! மனசு வலிக்குது.! ஆதங்கத்தை கொட்டிய சுப.வீரபாண்டியன்.!!

    திமுக துரைமுருகன் இல்ல விழாவில் சமஸ்கிருத மந்திரம்.! மனசு வலிக்குது.! ஆதங்கத்தை கொட்டிய சுப.வீரபாண்டியன்.!!

    தமிழ்நாடு
    புதுக்கோட்டைக்கு புறப்பட்டார் முதல்வர் விஜய்!! 4,500 போலீசார் குவிப்பு! பலத்த பாதுகாப்பு!

    புதுக்கோட்டைக்கு புறப்பட்டார் முதல்வர் விஜய்!! 4,500 போலீசார் குவிப்பு! பலத்த பாதுகாப்பு!

    அரசியல்
    ஊர்காவல்படை வீரர் படுகொலை.! மதுவிலக்கு வாக்குறுதி எங்கே.? வெளுத்து வாங்கிய வேல்முருகன்.!!

    ஊர்காவல்படை வீரர் படுகொலை.! மதுவிலக்கு வாக்குறுதி எங்கே.? வெளுத்து வாங்கிய வேல்முருகன்.!!

    தமிழ்நாடு
    EPFO-வில் அதிரடி மாற்றம்..! இனி எல்லாமே WHATSAPP-ல்..! மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய வசதி..!!

    EPFO-வில் அதிரடி மாற்றம்..! இனி எல்லாமே WHATSAPP-ல்..! மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய வசதி..!!

    இந்தியா
    ALERT..!! வங்கக்கடலில் விஸ்வரூபம் எடுக்கும் முரசு..! துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள்..!

    ALERT..!! வங்கக்கடலில் விஸ்வரூபம் எடுக்கும் முரசு..! துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share