அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவதை மறைமுகமாக சுட்டிக்காட்டி புதிய திட்டம் தயாராகி விட்டதா என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் விமர்சனம் செய்துள்ளார். புதிய கட்சி தொடங்குவது தொடர்பாக முக்கிய அறிவிப்பை அண்ணாமலை வெளியிட்டார். புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார். தனது கட்சியில் இணைய வேண்டும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அழைத்தார். தமிழகம் மக்களுக்காக பணியாற்ற ஆறு ஆண்டுகள் அமைந்தது பெரிய பாக்கியம் என்று தான் கருதுவதாக தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலை மாற்றியமைக்கும் அடிப்படையில் பாஜகவில் இருந்து வெளியேறுகிறேன் என்று அறிவித்தார். 25 வயதில் கேப்டன் விஜயகாந்தின் கட்சியில் இன்டர்ன்ஷிப் செய்ய வாய்ப்பு கிடைத்தது தனது பாக்கியம் என்றார். ரஜினிகாந்துடன் நல்ல நட்பில் இருந்தேன் என்றும் டெல்லியில் இருந்து வந்த புதிய இயக்கத்தில் இணைய ரஜினி அறிவுறுத்தினார் எனவும் தெரிவித்தார். 18 ஆண்டுகளாக புதிய பாதையை உருவாக்க போராடிக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் அடையாளத்தை ஒருபோதும் நான் விட்டுக் கொடுத்தது கிடையாது என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, பாஜகவில் இருந்த போது ஒருபோதும் நான் தமிழகத்தின் நலனை விட்டுக் கொடுத்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார். அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவதை மாணிக்கம் தாகூர் எம்.பி. விமர்சித்தார். 2002 முதல் 2026 வரை அனைத்து கூட்டணிகளையும், அரசியல் பரிசோதனைகளையும் செய்து பார்த்தும் தமிழ்நாட்டில் வேரூன்ற முடியாத RSS-BJP அமைப்பின் புதிய திட்டம் தயாராகிவிட்டதா என்று கேள்வி எழுப்பினார். அமித் ஷாவின் அனுமதியுடன்,
இதையும் படிங்க: மேகதாது விவகாரம்: உதயநிதி சைலன்ட் மோடில் இருப்பது ஏன்..?? மாணிக்கம் தாகூர் நறுக் கேள்வி..!!
மோடியின் ஆசீர்வாதத்துடன், BJP மற்றும் RSS பெயர்கள் இல்லாத ஒரு புதிய அரசியல் முகமூடி என்று கூறினார். பெயர் மட்டும் புதிதாக இருக்கலாம். கொள்கை, கட்டுப்பாடு, நோக்கம் அதே பழையதா என்று கேட்டுள்ளார். தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கான “Plan B” ஆக இது உருவாக்கப்படுகிறதா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது என்றும் தமிழ்நாடு கடந்த காலத்திலும் அரசியல் வேடமாற்றங்களை அடையாளம் கண்டுள்ளது என்றும் இனியும் பெயர் மாற்றத்தை அல்ல, உண்மையான மாற்றத்தையே மக்கள் மதிப்பிடுவார்கள் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக - காங்., மோதல் உச்சம்! அனிதா ராதாகிருஷ்ணனுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி!