தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை தமிழக பாஜக நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். ஆளுநரிடம் என்ன பேசினோம் என்பது குறித்து நயினார் எடுத்துரைத்தார். அரசுப் பொறுப்பில் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி உள்ளிட்டவர்கள் நியமிக்கப்பட்டதை ஆளுநரிடம் சுட்டிக்காட்டியதாக தெரிவித்தார். தமிழக வெற்றி கழகம் ஆட்சி பொறுப்பேற்ற 55 நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வன்கொடுமைகளும், கொலைகளும் நடந்து இருப்பதாக தெரிவித்தார். திமுக ஆட்சிக்கும் தமிழக வெற்றிக்கழக ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்ற கருத்து தெரிவித்துள்ள நயினார் நாகேந்திரன், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.
மேலும், உயர்கல்வித்துறை அமைச்சர் தொடர்பாகவும் புகார் கொடுத்திருப்பதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நயினார் நாகேந்திரனுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார். உயர்கல்வி அமைச்சர் திரு. பெ. விஸ்வநாதன் மீது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் உண்மைக்குப் புறம்பாகத் தமிழக ஆளுநரிடம் புகார் அளித்திருப்பதை கண்டிப்பதாக தெரிவித்தார்.

அமைச்சர் விஸ்வநாதன் அவரது சொந்தத் தொகுதியில் விளையாட்டு நிகழ்ச்சிகளையும், குழந்தைகளுக்குான யோகா நிகழ்ச்சியையும், தன்னுடைய குழந்தைகளாகக் கருதி வாஞ்சையோடு விழா நடத்தியதைக் குறை கூறுவது "காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள்" என்கிற கதையாக இருக்கிறது என்று கூறினார்.
இதையும் படிங்க: 55 நாட்களில் 100-க்கும் மேற்பட்ட குற்றங்கள்... தவெக அரசு குறித்து ஆளுநரிடம் புகார்... நயினார் பரபரப்பு பேட்டி..!!
மேலும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் உயர்கல்வி அமைச்சராக இருக்கக் கூடாது என்கிற ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தத் துடிக்கிற ஆர்.எஸ்.எஸ்.ஸின் போதகர் கேசவநாயகம் எழுதிக் கொடுத்ததை எடுத்துக்கொண்டுபோய் ஆளுநரிடம் அளித்த குற்றச்சாட்டினால் உயர்கல்வித்துறையில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஆதிக்கமே மேலோங்க வேண்டும் என்கிற சித்தாந்தத்தையே இக்குற்றச்சாட்டு நிரூபிக்கிறது என்றும் கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ்.ஸின் வெறுப்பரசியலையே இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: "அவல ஆட்சி"..! காவல்துறைக்கே பாதுகாப்பில்ல... தவெகவை பந்தாடிய நயினார்..!