ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்தார். பின்னர் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்தார். இதற்கு பலனாக அவருக்கு சிறப்பு சலுகைகளும் செய்யப்பட்டதாக தகவல். அவரை போலவே அதிமுக தலைமை மீது வெறுப்பில் இருக்கும் பலரையும் இழுக்கும் திட்டம் திமுக வசம் இருக்கிறது என செய்திகள் வெளியாகி வந்தன.
அப்படி திமுக விரித்த வலையில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான செங்கோட்டையன் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களாகவே அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக பொதுக்குழுவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைக்க வேண்டும், அதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதிப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பை வெளியிட்ட மறுநாளே செங்கோட்டையனை கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் விலக்குவதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதனையடுத்து ஹரித்துவார் புறப்படுவதாக கிளம்பிய செங்கோட்டையன் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது ஒருங்கிணைந்த அதிமுக இருந்தால் தான் வர உள்ள தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும் என வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின.
இதையும் படிங்க: “அதை போய் செங்கோட்டையன் கிட்ட கேளுங்க”... செய்தியாளர்களிடம் டென்ஷனின் உச்சத்திற்கு சென்ற அதிமுக எம்.எல்.ஏ...!
அதன் பின்னர் டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தனிமையில் சந்தித்து ரகசிய ஆலோசனை நடத்தினார். அப்போது அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிடவேண்டாம் என கோரிக்கை விடுத்ததாகவும், அதனை அமித் ஷா ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் செங்கோட்டையனின் அனைத்து திட்டங்களும் தவிடுபொடியான நிலையில் அவரை கட்சியை விட்டு நீக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகவுள்ளன.
இன்று மாலை 4 மணிக்கு மேல் கொங்குமண்டலத்தைச் சேர்ந்த முக்கிய அதிமுக புள்ளி அண்ணா அறிவாலயத்திற்குச் செல்ல உள்ளதாகவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைய உள்ளதாகவும் திமுக உடன் பிறப்புகள் சோசியல் மீடியாக்களில் தீயாய் பதிவிட்டு வருகின்றனர்.
திராவிட முன்னேற்ற இயக்கத்திற்கு வருக வருக என வரவேற்கிறோம்..! இணைந்து இந்த இயக்கத்தை மற்றொரு நூற்றாண்டிற்கு கொண்டு செல்வோம்..! 🔥🔥🔥
இன்று மாலை 4மணி அண்ணா அறிவாலயம் நோக்கி pic.twitter.com/5aozmd6kSY
— ஹோட்டல் டுபாக்கூர் (@Hotel_Dubakoor) September 19, 2025
இதையும் படிங்க: பரபரக்கும் அரசியல் களம்... A.K. செல்வராஜ் கட்சி நிர்வாகிகளோடு திடீர் ஆலோசனை...!