‘சென்னை மாநகராட்சி மேயர் பதவியை பட்டியல் சமுதாய பெண்களுக்கு ஒதுக்கீடு செய்த நிலையில்… தனக்கு மிகவும் கட்டுப்பாடாக இருப்பார் என சேகர்பாபுவால் கருதி இந்த உயர் பதவிக்குக் கொண்டுவரப்பட்டவர் தான் மேயர் பிரியா. கிட்டத்தட்ட 3 வருடங்கள் மேயராக இருந்திருக்கும் நிலையில் இப்போது அமைச்சருக்கு எதிராகவே சில காய் நகர்த்தல்களை ஆரம்பித்திருக்கிறார் மேயர் பிரியா.

வடசென்னையில் இருந்து தேர்வான முதல் பெண் மேயர், சென்னையின் மூன்றாவது பெண் மேயர் என்ற பெருமைக்கு எல்லாம் சொந்தக்காரராக வலம் வருகிறார் பிரியா ராஜன். தனக்கு இருக்கும் இந்த பெயரையும், புகழையும் அப்படியே பயன்படுத்தி எப்படியாவது எம்.எல்.ஏ. ஆகிவிட வேண்டும் என திட்டமிட்டு வருகிறாராம்.
இதையும் படிங்க: பட்டை, நாமம்… சமாதியில் கோபுரம்… கொஞ்சம்கூட சூடு சொரணை இல்லையா..? இளம்பெண் நறுக் சுருக்..!

வருகிற சட்டமன்றத் தேர்தலில் சென்னைக்கு உட்பட்ட ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்றம் செல்ல வேண்டும் என்பதுதான் மேயர் பிரியாவின் விருப்பம் எனக்கூறப்படுகிறது. ஏற்கனவே சென்னை மாநகராட்சி மேயராக இருந்த ஸ்டாலின், இப்போது முதலமைச்சராக இருக்கிறார். ஏற்கனவே மேயராக இருந்த மா. சுப்பிரமணியன் இப்போது அமைச்சராக இருக்கிறார். இந்த வரிசையில் சட்டமன்ற உறுப்பினர், சென்னை திமுகவின் இளைய பெண் முகம், அதிர்ஷ்டம் அடித்தால் அமைச்சர் என தனது அடுத்த கட்ட பயணம் பற்றிய, அரசியல் கணக்கில் இருக்கிறார் மேயர் பிரியா.

சட்டமன்றம் செல்ல வேண்டும் என்ற தனது ஆசைக்கு சேகர் பாபு எங்கே தடை போட்டு விடுவாரோ? என அஞ்சிய பிரியா, இந்த விஷயத்தை நேரடியாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காதுகளுக்கு கொண்டு சென்று காய் நகர்த்திக் கொண்டிருக்கிறாராம். இதனால் அதிர்ச்சியில் இருக்கும் சேகர்பாபுவுக்கு மற்றொரு ஆப்பையும் வைக்க பிரியா திட்டமிட்டுள்ளதாக திமுக வட்டாரத்தில் பேச்சு கிளம்பியுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் எந்தத் தொகுதியில் போட்டியிடலாம் என ஆலோசனை நடத்தி, சென்னை திரு வி க நகர் சட்டமன்ற தொகுதியை குறி வைத்து இருக்கிறார் பிரியா. ஆனால் இந்த தொகுதியானது அமைச்சர் சேகர் பாபுவின் ஆதரவாளரும், திமுகவின் துணை அமைப்புச் செயலாளருமான தாயகம் கவி என்பவருடைய தொகுதியாம். இந்த தொகுதியை மேயர் பிரியா டார்க்கெட் செய்துள்ளது அமைச்சர் சேகர் பாபுவை கொதிப்படையச் செய்துள்ளது.
இதையும் படிங்க: டெல்லியில் அலறவிட்டு அனுப்பியிருக்காங்க... அண்ணாமலையை பங்கம் செய்த சேகர் பாபு...!