தவெக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து காஞ்சிபுரத்தில் திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம். முதல்வர் விஜய் படப் பாடல்களைப் பாடி பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் சுட்டிக்காட்டிய சென்னை மேயர் பிரியா.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை, கொள்ளை மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கத் தவறிய தவெக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று கட்சித் தலைமை அறிவித்திருந்தது.
அதன்படி, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க: “வாய் மட்டும் தான் வேலை செய்யுது மத்தது எல்லாம்"..! விஜயை பங்கமாய் கலாய்த்த இபிஎஸ்..!!
காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சென்னை மேயர் பிரியா ராஜன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுக் கண்டன உரையாற்றினார்.
அப்போது ஆர்ப்பாட்டத்தில் பேசிய சென்னை மேயர் பிரியா, முதல்வர் விஜய் நடித்த 'வேலாயுதம்' திரைப்படத்தில் வரும் 'ரத்தத்தின் ரத்தமே' பாடல் மற்றும் 'வேட்டைக்காரன்' படத்தில் வரும் 'நான் அடிச்சா தாங்க மாட்ட' உள்ளிட்ட பாடல்களைப் பாடி, தமிழகத்தில் பெண்களுக்கு எதிராகத் தொடர்ந்து அரங்கேறி வரும் வன்கொடுமைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்துக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவிஎம்பி. எழிலரசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த திமுக மகளிர் அணியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்
இதையும் படிங்க: அன்பில், நேருவை தொடர்ந்து அடுத்த டார்கெட் யார்? லிஸ்டில் திமுகவின் 3 Ex.அமைச்சர்கள்.. விஜய் அதிரடி பிளான்!