தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை சட்டப்பேரவை கூடியது. சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் தொடங்கிய இந்த நாளின் அலுவல்களில் முதலில் மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தொடர்ந்து, தமிழ் திரைத்துறை, இலக்கியம் மற்றும் இசைத்துறையில் தங்கள் பங்களிப்பால் நினைவுகூரப்படும் சில முக்கிய பிரபலங்களின் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பேரவையின் முக்கிய நிகழ்வாக காவிரி நீர் பங்கீடு மற்றும் மேகதாது விவகாரம் தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் பேரவையில் பதிலளித்தார். உறுப்பினர்களின் கருத்திற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஆனந்த், பேச்சுவார்த்தைக்கு தமிழ்நாடு முதலமைச்சரால் கேட்டுக் கொள்ளப்பட்டது என்று கூறினார். கர்நாடக முதலமைச்சர் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டாம் என்று கூறினார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

காவிரி நீரை கர்நாடகா விடமிருந்து பெறுவது பல ஆண்டுகளாக சவாலாகவே இருக்கிறது என தெரிவித்தார். காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவட்டும் கர்நாடகா நீர் திறக்கவில்லை என்று கூறியுள்ளார். காவிரி தமிழகத்தின் உயிர் நாடி என அமைச்சர் ஆனந்த தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மூன்றாம் தேதி முதல்வர் விஜய் கர்நாடகா செல்ல இருந்ததாகவும் அந்த மாநில முதலமைச்சர் அறிவுறுத்தியதின் பேரில் அந்த திட்டம் கைவிடப்பட்டதாகவும் கூறினார். காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எந்த சமரசமும் செய்யாது என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மேகதாது பெரும் பிரச்சனை..! தமிழ்நாட்டிற்கு பேராபத்து...!! பேரவையில் எச்சரித்த சௌமியா அன்புமணி..!!
தண்ணீர் பற்றாக்குறையால் மேட்டூர் அணையின் நீர் திறக்கவில்லை என்றும் தென்மேற்கு பருவமழை இயல்பாக இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசு காவிரி விவகாரத்தில் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கும் எனவும் பேரவையில் அமைச்சர் ஆனந்த் உறுதியாக தெரிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்க சட்டரீதியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார். சூழலை கருத்தில் கொண்டு மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: CM விஜய்க்கு கூட்டணி கட்சிகளை நெருக்கடி..! உபரி நீர் தான் வருது... பேரவையில் EPS உரை..!!