தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை சட்டப்பேரவை கூடியது. சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் தொடங்கிய இந்த நாளின் அலுவல்களில் முதலில் மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தொடர்ந்து, தமிழ் திரைத்துறை, இலக்கியம் மற்றும் இசைத்துறையில் தங்கள் பங்களிப்பால் நினைவுகூரப்படும் சில முக்கிய பிரபலங்களின் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக உரையாற்றினார். அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்ட ஏன் மறுக்கிறீர்கள் என்று பல கேள்விகளை முன் வைத்தார். தொடர்ந்து முதல்வர் விஜய் பதிலுரை வழங்கினார். உதயநிதி பேசும் பொழுது குறிப்பிட்டு பேசும் முதல்வர் விஜய் எழுந்த நிலையில் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். காவிரி நதிநீர், டெல்டா மாவட்ட குருவை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம். மேகதாது அணை தொடர்பான இடைச்செருகலை நாங்கள் ஏற்கவில்லை என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: காவிரி உரிமையில் CM விஜய் கறார்..! மேகதாது விவகாரத்தில் முதல்வரின் அதிரடி ட்விஸ்ட்... பெங்களூரு சர்ச்சைக்கு DOT..!
மேகதாது அணை தொடர்பான திருத்தத்தை தாங்கள் ஏற்கவில்லை எனவும் கூறியுள்ளார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணியினரை கூறுவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டு பேசினார். கர்நாடக அணையில் போதிய நீர் இருந்தும் திறக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினார். கர்நாடகா அணைகள் நிரம்பியதால் தற்போது உபரி நீர் தான் வருகிறது எனவும் கூறினார்.
இதையும் படிங்க: மேகதாது விவகாரம்... வேகம் காட்டும் கர்நாடகா..! என்ன செய்யப் போறீங்க..? பேரவையில் உதயநிதி சரமாரி கேள்வி..!!