தமிழ்நாட்டிற்கு மோடி செய்த துரோகத்தை சொல்லும் வகையில் திமுகவினர் மட்டுமில்லாமல் எதிர்க்கட்சியினர் வீட்டிற்கு சென்று ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை செய்கிறோம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
வர உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக இப்போதே தீயாய் களப்பணிகளை ஆரம்பித்துள்ளது. அதற்கு முதற்கட்டமாக ஒரு கோடி புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்கோடு “ஓரணியில் தமிழ்நாடு” என்ற இயக்கத்தினை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து மாவட்டந்தோறும் பட்டி தொட்டி வரை அமைச்சர்கள், எம்.பி.க்கள் தொடங்கி வார்டு கவுன்சிலர்கள், வட்டம், ஒன்றியம் என திமுகவினர் தீவிரமாக கட்சிக்குள் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் இன்று நாகை, தெத்தி, நாகூர் பகுதிகளில் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை மேற்கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாங்கள் செல்லுமிடமெல்லாம் மக்கள் மகிழ்ச்சியடைவதை தமிழக முதல்வரின் உழைப்பிற்காக கிடைத்த வெற்றியாக பார்க்கிறோம். செல்லும் சில இடங்களில் கலைஞர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்று சொல்கிறார்கள் விடுபட்டவர்களுக்கு விரைந்து வழங்கப்படும். மக்களின் நிறைகளை மட்டுமில்லாமல் குறைகளை கேட்டறிந்து அதனை செய்து கொடுக்கிறோம்.
இதையும் படிங்க: மத நம்பிக்கையில் யாரும் தலையிடல; ஆனால் கட்டாயப்படுத்தக் கூடாது... ஸ்ட்ரிக்டாக சொன்ன அன்பில் மகேஸ்!!

மக்களிடம் நேரடியாக முதல்வர் வீடியோ காலில் பேசுவதால் மக்களின் குறைகளை முதல்வர் நேரடியாக கேட்க வாய்ப்பு கிடைக்கிறது. மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் வீட்டிற்கும் சென்று பரப்புரை செய்கிறோம். அவர்களை சந்தித்து பாஜக தமிழ்நாட்டிற்கு செய்யும் துரோகங்களை பிரசாரம் செய்கிறோம்.

சாதி, மதம், கட்சி வேறுபாடில்லாமல் அனைவரையும் சென்று பார்க்க சொல்லியுள்ளார் தமிழக முதல்வர். கல்வி நிதி , இயற்கை பேரிடர் நிதி என தமிழகத்திற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதிகளை வழங்காமல் இருப்பது குறித்தும் மக்கள் மத்தியில் எடுத்துரைத்து ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை செய்கிறோம் என்றார்.
இதையும் படிங்க: அடுத்த ஷாக் கொடுத்த டிரம்ப் அரசு..!! இந்தியாவுக்கு 500% வரி.. புதிய மசோதா தாக்கல்..!