தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆக ஐ.பெரியசாமி இருந்து வருகிறார். இவரது வீடு திண்டுக்கல் அசோக் நகரில் உள்ளது இவரது வீட்டில் காலை 7:30 மணி முதல் 4 அமலாக்கத் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 8 CRPF போலீசார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல் வள்ளலார் நகரில் உள்ள அமைச்சர் ஐ . பெரியசாமியின் மகள் இந்திரா வீட்டிலும் ஆறு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அங்கு 10 CRPF துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவரது மகன் செந்தில்குமார் திமுக கிழக்கு மாவட்ட செயலாளராகவும் பழனி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இவரது வீடு சிலப்பாடியில் உள்ளது. இவரது வீட்டில் 6 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 8 CRPF போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இதையும் படிங்க: “திறக்கப்பட்ட முக்கிய அறை கதவு” - இன்ச் பை இன்சாக அலச ஆரம்பித்த ED.. கலக்கத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி..!
மூன்று வீடுகளிலும் காலை 7:30 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும் தகவல் அறிந்து திமுக கட்சி தொண்டர்கள் வீட்டிற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
வத்தலகுண்டுவிலும் சோதனை:
வத்தலகுண்டு அருகே அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்பான இடங்களில் அமலாகத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஒட்டுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி மகன் பிரபு என்பவருக்கு சொந்தமான நூற்பாலையில் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: “திறக்கப்பட்ட முக்கிய அறை கதவு” - இன்ச் பை இன்சாக அலச ஆரம்பித்த ED.. கலக்கத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி..!