சென்னை, மதுரை, திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திறக்கப்பட்ட அறை கதவு:
தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சரான ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை இந்த சோதனையை மேற்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். சென்னை சேப்பாக்கத்தில் இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினருக்கான விடுதியில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு என ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையில அதிகாரிகள் நான்கு பேர் கொண்ட அதிகாரிகள் அறையின் கதவை திறப்பதற்காக வெகு நேரமாக காத்திருந்தனர். தற்போது அந்த அறை கதவை திறந்து உள்ளே சென்ற நான்கு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அதே போன்று பசுமை வழி சாலையில் அமைச்சருக்காக ஒதுக்கப்பட்டிருக்கிற அரசு குடியிருப்பிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: காலையிலேயே பரபரப்பு; அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை...!
தற்போது திண்டுக்கல்லில் தான் அமைச்சர் ஐ.பெரியசாமி இருக்கிறார். அங்குள்ள அவருடைய வீட்டிலும் இந்த சோதனை நடப்பதாகவும், மதுரையில் அவர் தொடர்புடைய இடத்திலும் இந்த சோதனை நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சோதனைக்கான காரணம் என்ன?
கடந்த திமுக ஆட்சியின் போது வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்த போது அப்போதைய முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த அதிகாரிக்கு வீட்டுமனை இடஒதுக்கீடு செய்ததாக ஐ பெரியசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. அந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்ட போதும், சமீபத்தில் அந்த வழக்கு மீண்டும் விசாரணைகு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை ஒரு சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கை பதிவு செய்திருந்தது.
ஆனால் சோதனைக்கான காரணம் என்ன என்பது குறித்தும், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும் சோதனை முடிந்த பிறகு அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அது குறித்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இந்த சோதனை முடிந்த பிறகு அமலாக்கத்ததுறை வந்து வெளியிடலாம் அதாவது அந்த வழக்கு என்னவென்றால் 2006 11 என்ற ஆட்சி காலக ட்டல அப்பொழுது வந்து அமைச்சர் ஐ பெரியசாமி வந்து அவர் வந்து அந்த இதற்கான ஒரு இடத்தை ஒதுக்கீடு செய்ததுல வந்து முறைகீடு நடந்ததாக லஞ்சடி துறை ஒரு வழக்கை பதிவு செய்திருந்தது அதாவது அப்பொழுது ஐஜி
வழக்கின் பின்னணி என்ன?
தமிழக காவல் துறையில் கடந்த 2006-2011 காலகட்டத்தில் உளவுத் துறை ஐஜியாக ஜாபர்சேட் இருந்தபோது, திருவான்மியூர் பகுதியில் தமிழக அரசின் வீட்டு வசதி வாரிய நிலம் ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டது. மேலும், அந்த நிலத்தில் வீடு கட்டாமல், சட்டத்துக்கு புறம்பாக வணிக வளாகம் கட்டப்பட்டதாக, 2011-ம் ஆண்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், 2007-2008 காலகட்டத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிலம், ஜாபர் சேட்டுக்கு ஒதுக்கப்பட்டதாகவும், அந்த நிலத்தில் அவர் சட்டத்துக்கு புறம்பாக வணிக வளாகம் கட்டியதாகவும், மேலும், சட்டவிரோத வெளிநாட்டு பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகவும் அமலாக்கத் துறையினர் 2020-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதுதொடர்பாக ஜாபர் சேட் மற்றும் அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் அமலாக்கத்துறை ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரூ.17 ஆயிரம் கோடி லோன் மோசடி! இதெல்லாம் என்ன கணக்கு? ED அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்..!