ஜெயலலிதா இருந்தபோது சரி, இப்போதும் சரி அதிமுக எடுக்கின்ற நிலைபாடுகள் அனைத்தும் அந்த கட்சி சுய சிந்தனையோடு எடுத்து வந்தது. இப்போது டெல்லியில் இருந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா என்ன சொல்லுகிறார்களோ? அதற்கேற்ப அனைத்து நிலைபாடுகளையும் எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவே அதிமுகவின் கொள்கைகள், லட்சியங்கள் அனைத்தும் காற்றில் பறக்கவிட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதற்கு இந்த திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்திலேயே தெரிகிறது.
2014, 2017 ஆகிய இரண்டு காலகட்டங்களிலும் அதிமுக தான் ஆட்சியில் இருந்தது. அந்த ஆட்சியிலே தீபத்தை இன்னொரு இடத்தில் ஏற்றுவதற்கு அனுமதி மறுத்து இவர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்கள். ஆனால் இன்றைக்கு அதை மறந்துவிட்டு, இரண்டாம் இடத்திலும் தீபம் ஏற்றுவதற்கு அரசு முன்வர வேண்டும் என்று அறிக்கை விடுவது போலித்தனமானது. இது அதிமுக தனது கொள்கைகள், கோட்பாடுகள், லட்சியங்களை பாரதிய ஜனதாவிடம் அடிமை சாசனம் எழுதி தந்துவிட்டார்கள் என்பதை தெளிவுபடுத்துகிறது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விரும்பத்தகாத சூழலை ஏற்படுத்தி கலவரத்தை உண்டு பண்ண முயற்சிக்கிறார்கள். திமுக ஆட்சியில் பிரிவினை எடுபடாது. திமுக அரசு பக்தர்களை மதிக்கிறது என குற்றச்சாட்டினார்.
இதையும் படிங்க: இதுதான் டீலிங்...!! - திமுக - பாஜக இடையே மறைமுக உறவு... போட்டுத்தாக்கிய ஜெயக்குமார்....!
இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எந்த வித கருத்தும் தெரிவிக்கவில்லையே? என்ற கேள்விக்கு, அதனை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும் எனக்கூறினார். இன்னும் 3 மாதங்களில் தேர்தல் வர உள்ளது. அறநிலையத்துறை சார்பில் எத்தனை கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்த வேண்டும், எத்தனை குளங்கள் தூர்வாரப்பட வேண்டும்? என கேள்வி எழுப்பினர், 2,064 குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன. 120 கோடி ரூபாய் செலவில் 450 குளங்களை சீரமைக்கிற பணி நடைபெற்று வருகிறது.
அசோக சக்கரவர்த்தியாக இருக்கின்ற எங்கள் முதல்வர் இந்த ஆட்சியிலும் நான்கு குளங்களை புதிதாக வெட்டி, அதனை தற்போது பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கின்றார். அதேபோல் ‘முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி’ என்பது போல், கடந்த காலங்களில் திருக்கோயில்களின் தேர்தல்கள் மழையிலும் வெயிலிலும் சேதமடைந்து வந்ததைத் தடுக்கும் வகையில், இதுவரை 700 திருக்கோயில்களில் இருக்கின்ற திருத்தேர்களுக்கு கொட்டகை அமைத்துக் கொடுத்திருக்கிறார். ஆன்மீக வரலாற்றில் இல்லாத அளவிற்கு இந்து சமய அரளத்துறை உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து தற்போது நடைபெறுகின்றது போல் திருப்பணிகள் எந்த காலத்தில் நடைபெறவில்லை என்றார்.
இதையும் படிங்க: #BREAKING திருப்பரங்குன்றத்தில் திக்.. திக்...!! - காலையிலேயே காவல்துறை அதிரடி... நயினார் நாகேந்திரன் உட்பட 113 பேர் மீது பாய்ந்தது நடவடிக்கை...!