ஈரோடு மாவட்டம் பவானியில்தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜயின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு தனியார் திருமண மண்டபத்தில் நடந்த சமபந்தி விருந்து மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி கலந்துகொண்டு பேசும்போது,
பவானி சட்டமன்ற தொகுதியின் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் எங்களது கவனத்திற்குக் கொண்டு வரலாம். வரும் காலத்தில் இத்தொகுதியை ஒரு முன்னோடித் தொகுதியாக மாற்றிக் காட்டுவோம். ஊழலற்ற லஞ்சமற்ற ஆட்சி: "நான் ஊழல் செய்ய மாட்டேன், என் கூட இருப்பவர்களையும் ஊழல் செய்ய விடமாட்டேன்" என்ற தலைவர் தளபதி அவர்களின் வாசகத்தை 100% அவரது தம்பிகளாகிய நாங்கள் நிச்சயம் காப்பாற்றுவோம்.
மக்களுக்குச் சேர வேண்டிய அத்தனை நலத்திட்டங்களும் எந்தவித ஊழலும் லஞ்சமும் இன்றி நேரடியாகச் சென்றடையும். அரசியல்வாதிகள் ஊழல் செய்து பார்த்திருப்பீர்கள், ஆனால் 2026 இல் மக்கள் நீங்கள் பண்ணீங்க பாருங்க பெரிய ஊழல், வாங்க வேண்டிய இடத்தில் வாங்கி குத்த வேண்டிய இடத்தில் குத்தி, எங்களை ஆட்சிக்கு அமர வைத்தீர்கள், சாதாரண சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்குக் கூட 25 கோடி முதல் 50 கோடி வரை அவரவர் தகுதிக்கேற்ப செலவு செய்தார்கள், ஆனால், எங்களை வெறும் 5 லட்ச ரூபாயில் எங்களைச் சட்டமன்ற உறுப்பினராக்கினீங்க பாருங்க நீங்க வேற லெவல், இதற்காக நாங்கள் உண்மையாக இருப்போம்.
இதையும் படிங்க: மாஸ்டர் பிளான் போட்ட விஜய்... டாப் அதிகாரிகள் முகத்திற்கு நேராக சி.எம். சொன்ன முக்கிய தகவல்...!
வாழ்வதற்கு வீடு, வயிற்றுக்கு சோறு, வருமானத்திற்கு வேலை — இவை மூன்றும் அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும் என்பதே தவெக அரசின் முதன்மைக் கொள்கையாக இருக்கும். அனைவருக்கும் தரமான, சமமான கல்வி கிடைக்கவும், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரவும் இந்த அரசு முழு கவனம் செலுத்தும்.
கடந்த கால ஆட்சிகளில் போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்கத் தவறிவிட்டனர். மாண்புமிகு தவெக தலைவர் அவர்களின் தலைமையில் தமிழ்நாட்டில் போதைப்பொருள் என்னும் ஆலமரத்தின் கிளைகளை தற்போது வெட்டி வருகிறோம் முழுமையாக ஆலமரத்தையே வேரோடு அறுத்து, பெண்களுக்குப் பாதுகாப்பான முன்மாதிரி மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றுவோம் என பேசினார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் ஆன பிறகு முதல் முறை... கரூர் செல்கிறார் ஜோசப் விஜய்... எப்போது தெரியுமா?