ஜூலை இரண்டாவது வாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கரூர் செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க அவர் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை 40 நாட்களுக்குள் சென்னைக்கு வரவழைத்து, அப்போதைய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் சந்தித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அவர்களது சொந்த ஊரிலேயே நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: #BREAKING அதிமுகவில் அடுத்த விக்கெட் காலி... எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்... பின்னணி என்ன?
கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக எழுந்த சர்ச்சைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்தச் சந்திப்பு அமையும் என்று கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு இந்தப் பயணத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தாலும், சட்டப்பேரவை கூட்டத்தொடர், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம், துறை சார்ந்த ஆலோசனைக் கூட்டங்கள் உள்ளிட்ட தொடர் அரசு பணிகள் காரணமாக பயணம் தள்ளிப்போனதாக கூறப்படுகிறது.
இந்தப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஜூலை மாதத்தின் இரண்டாவது வாரத்தில் முதலமைச்சர் கரூர் செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி எழுப்பப்பட்டன. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிக்கையும் எழுந்த நிலையில், விஜய் இதுவரை சம்பவ இடத்திற்கு நேரில் செல்லவில்லை என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தது.
இந்தச் சூழலில், தமிழ்நாடு முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான ஜோசப் விஜய், கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டிலேயே பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து நிதியுதவி வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் குறுகிய சாலைகள் அமைந்த பகுதிகளில் இருப்பதாலும், சம்பவத்திற்குப் பிறகு நிலவிய பதற்றமான சூழலில் அவர் அங்கு சென்றால் மீண்டும் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்ற காரணத்தால் அந்தப் பயணம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதற்குப் பதிலாக, சென்னையில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதிக்கு பாதிக்கப்பட்ட குடும்பங்களை வரவழைத்து, அப்போதைய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருந்தார்.
ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மீண்டும் கரூர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்ற திட்டம் இருந்தபோதிலும், தொடர் அரசு நிகழ்வுகள் காரணமாக அது தாமதமானது. தற்போது ஜூலை இரண்டாவது வாரத்தில் கரூர் சென்று, கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: இன்று முதல் 2 நாட்களுக்கு அதிரடி... களத்தில் இறங்கிய சி.எம்.விஜய்... தலைமைச் செயலகத்தில் குவியும் முக்கிய அதிகாரிகள்...!