தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் நெருங்கிவிட்டது. மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தை திமுக களமாடி வருகிறது. அதிமுக மற்றும் பாஜகவின் அரசியலை தொடர்ந்து விமர்சித்து வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியையும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். பாஜகவில் ஏற்படும் அபாயங்கள் என்றும் பேசி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன் என்று முதல்வர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அதிமுகவின் ஓனராக இருப்பது பாரதிய ஜனதா கட்சி என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி வாய் திறக்கவில்லை என்ற குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ் மொழியை சிதைக்க நினைக்கும் பாசிச பாரதிய ஜனதா கட்சி நமக்கு வேண்டாம் என்றும் தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பது மக்களுக்கு தெரியும் எனவும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார். தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு எதிர்த்து தொடர்ந்து சண்டை செய்து இருக்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். தான் பதவியேற்றதிலிருந்து கல்வியின் மகத்துவத்தை மாணவர்களிடம் கூறி வருவதாகவும் அவர் எடுத்துரைத்தார்.
இதையும் படிங்க: சென்னைக்கான ஸ்பெஷல் வாக்குறுதிகள்..! திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு..!!
கலைஞர் கருணாநிதியுடன் தன்னை எப்போதும் ஒப்பிட முடியாது என்றும் கூறியுள்ளார். தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்க நினைப்பவர்களுக்கும் நான் டேஞ்சர் தான் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுகவை இந்து விரோத கட்சி போல சித்தரிப்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.
இதையும் படிங்க: “கோடான கோடி நன்றிகள்...” - பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் மு.க.ஸ்டாலின்... கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்...!