டாஸ்மாக் நிறுவனத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள், 27ம் தேதிக்கு பின்பு வேறு ஒரு நடவடிக்கை எடுக்க இருக்கிறோம் எனவும் டெட்ரா பேக் மூலம் மது விற்பனை கொண்டுவர முயன்ற பொழுது ஃப்ரூட்டி பாக்ஸ் போல கவர்ச்சியாக இருப்பதால் குழந்தைகளுக்கு அதன் மீது ஆர்வம் வரும் என்றார்கள் என்பதால் இப்போது அதற்கு மாற்று வழியைக் கண்டு பிடித்துக் கொண்டிருக்கிறோம் என அமைச்சர் விக்னேஷ் தகவல்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. அதற்கான பல கட்ட முயற்சிகள் நடைபெற்று வருகிறது. ஒரு மாதமாக காவல்துறை போதைப் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறது. கடந்த 10.5.26 முதல் 20.7.26 வரை2892 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3845 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 3579 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தவிர்த்து 27 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.1002379 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஹெராயின், மெத்தபெட்டமைன், கஞ்சா சாக்லேட் என பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அரசு எந்தவித சமரசமும் இன்றி போதை இல்லா தமிழகம் உருவாக நடவடிக்கை எடுத்து வருகிறது. அடுத்த தலைமுறை ஆரோக்கியமான தலைமுறை உருவாக இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதையும் படிங்க: மதுப்பிரியர்களுக்கு குட் நியூஸ்! டாஸ்மாக்கில் 54 புதிய மதுபான பிராண்டுகள்? விரைவில் அறிமுகம் செய்ய திட்டம்!
கடந்த ஆட்சியில் பத்து ரூபாய் வாங்கிக் கொண்டிருந்தது இன்னும் வாங்குகின்றனர். அது யாருக்கு போகிறது? என்ற கேள்விக்கு, இப்பொழுது பல இடங்களில் குறைந்து இருக்கின்றது. இப்போது 5 ரூபாய், மூன்று ரூபாய் என வாங்குவதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது.அதை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு கொண்டு இருக்கிறோம். இதை தடுக்க வேண்டும் என்பதற்காக பேசினோம். மூன்று அல்லது நான்கு நாட்கள், 27ம் தேதிக்கு பின்பு வேறு ஒரு நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்
நட்சத்திர ஹோட்டல்களில் மதுக்கூடங்கள் ஏன் உருவாக்கினார்கள் என்றால் வெளிநாட்டில் இருந்து தொழில் செய்ய வருபவர்களுக்கு இந்த வசதி தேவைப்படும் என்பதற்காக இரவை 12 மணி என வைத்து இருக்கிறோம். குஜராத்தில் கூட இப்படித்தான் இருக்கிறது.அந்த அடிப்படையில் தான் வைத்திருக்கிறோம் டாஸ்மாக்கில் பழைய நடைமுறையை தொடர்வோமா? வேறு வழி கூறி கலந்துரையாடல் நடந்தது.நம்மை பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்.
இந்த துறையை மட்டும் மோசமாக நினைக்கிறார்கள். இந்த துறையை மாற்ற கலந்துரையாடல் நடந்தது. அதில் பேசப்பட்ட ரெஸ்ட்ரோபாரை மட்டும் யாரோ சொல்லி இருக்கின்றனர். டெட்ரா பேக் மூலம் மது விற்பனை கொண்டுவர முயன்ற பொழுது ஃப்ரூட்டி பாக்ஸ் போல கவர்ச்சியாக இருப்பதால் குழந்தைகளுக்கு அதன் மீது ஆர்வம் வரும் என்றார்கள். இப்போது அதற்கு மாற்று வழியைக் கண்டு பிடித்துக் கொண்டிருக்கிறோம். மது கொள்முதல்
எல்லாருக்கும் சரிசமமாக கொடுப்பதற்காக திட்டத்தை கையில் எடுத்து இருக்கிறோம்.
இரண்டு பேர் மூன்று பேரிடம் மட்டும் இல்லாமல் அனைவருக்கும் ஜனநாயக அடிப்படையில் இருப்பது சரியாக இருக்கும்.வெள்ளலூர் பேருந்து நிலையம் சீக்கிரம் வேலை முடிந்துவிடும். விரைவில் நடைமுறைக்கு வரப்போகிறது. குப்பை கிடங்கு பிரச்சினையும் அடுத்த ஆண்டுக்கு சரி செய்யப்படும் என அமைச்சர் விக்னேஷ் பேட்டி அளித்தார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் உணவகத்துடன் மதுபானக்கூடம்? ரெஸ்டோ-பார் திட்டம் குறித்து அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!