தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கவுண்டம்பாளையம் தொகுதியில் இருந்து 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக பதவியேற்ற கனிமொழி சந்தோஷ், சமீபத்தில் சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்துக்கு உள்ளானார். அவரது பழைய ஜோதிட அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, “பெரிய சோபாவில் உட்கார்ந்திருப்பது”, “தளபதியின் பெயரை கெடுப்பது” போன்ற கமெண்ட்களுடன் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
அதற்கு தான் முன்பு ஜோதிட பணி செய்து கொண்டிருந்ததாகவும் அதற்காக உருவாக்கப்பட்ட அலுவலகத்தில் தான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் வீடியோ வெளியிட்டார். அந்த அலுவலகத்தை சுற்றி காண்பித்த அவர் எம்எல்ஏ அலுவலகத்தில் புதுப்பிக்கும் பணி நடந்து கொண்டிருப்பதாகவும் வர்ணம் பூசும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

அதனால்தான் தற்போது இருக்கும் தனது அலுவலகத்தில் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறினார். அந்த சோபா தனது சொந்த அலுவலகத்தின் பொருள் எனவும், அரசு பணம் அல்லது ஆடம்பரம் அல்ல எனவும், “பிளாஸ்டிக் இல்லைங்க இது லெதர், வீடு இல்லைங்க இது என் ஆபீஸ்” என விளக்கினார்.
இதையும் படிங்க: மக்கள் மீது சுமையை ஏற்றாதீங்க..! பெட்ரோல், டீசல் விலையை குறைக்க MLA பிரேமலதா வலியுறுத்தல்..!
மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபடுவதாகவும், தனது அலுவலகக் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் எனவும் உறுதியளித்தார். விளக்க வீடியோவுக்குப் பிறகு, அவர் வெள்ளக்கிணறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு செய்து, மக்கள் பிரச்சினைகளை நேரில் கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: மன்னிச்சிடுங்க..! தெரிஞ்சு பண்ணல... மாற்றுத்திறனாளிகள் சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்ட அமைச்சர் கீர்த்தனா..!