பாமக நிர்வாகி அன்புமணி தமிழக முழுவதும் தனது கட்சி நிர்வாகிகளை சந்தித்து பொதுமக்களையும் சந்தித்து வருகிறார். இந்த நிலையில் நாளை நெல்லையில் அன்புமணி சிந்து பூந்துறை பகுதிகளில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கும் நிகழ்ச்சியை பார்வையிடுவதற்காக வர இருக்கிறார்.
மதியம் இங்குள்ள தனியார் ஓட்டலில் தங்கி உணவு அருந்தி ஓய்வு எடுக்கிறார். இந்த நிலையில் நெல்லை மாவட்ட பாமக நிர்வாகிகள் சார்பில் பாமக நிர்வாகி அன்புமணி நெல்லை வண்ணாரப்பேட்டை ஊசி கோபுரத்திலிருந்து ரோடு ஷோ நடத்துவதற்கு அனுமதி கேட்டு நெல்லை மாநகர காவல் துறையில் கடிதம் கொடுத்தனர்.
நீதிமன்றத்தில் ரோடு ஷோ நடத்துவதற்கு தற்போது அனுமதி வழங்கப்படாத நிலை இருப்பதாக கூறி காவல்துறை சார்பில் அன்புமணி ரோடு ஷோ அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து பாமக நிர்வாகிகள் வேறு இடத்தில் அனுமதி கேட்டனர். அங்கேயும் அனுமதி மறுக்கப்பட்டது.
இதையும் படிங்க: அப்பாவை பார்க்க முடியாமல் திரும்பிய அன்புமணி... ராமதாஸ் நிலை குறித்து வெளியிட்ட பரபரப்பு தகவல்...!
பாமக தலைவர் அன்புமணி தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்என்ற பெயரில் மாநிலம் முழுக்க நடைப்பயணத்தை நடத்தி வருகிறார். ஜூலை 26ம் தேதி திருப்போரூரில் நடைப்பயணத்தைத் தொடங்கினார். அப்போதே அன்புமணி நடைப்பயணத்திற்கு அனுமதி தரக்கூடாது என ராமதாஸ் டிஜிபிக்கு மனு அளித்திருந்தார். இதையடுத்து அன்புமணி ரோடு ஷோ நடத்த தடை விதித்து காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி உத்தரவிட்டிருந்தார்.
அதன் பின்னர் வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு காவல்துறை தரப்பில் இருந்து அன்புமணி சுற்றுப்பயணத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. சமீபத்தில் கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 51 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் உள்ள நிலையில், தற்போது ரோடு ஷோவிற்கு அனுமதி அளிக்க முடியாது என அன்புமணி தரப்பிற்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: “பை நிறைய பொய்” - அன்புமணியின் மறுபக்கத்தை வெளிச்சம் போட்டு காட்ட ஆரம்பித்த ராமதாஸ் தரப்பு...!