நேபாளப் பெருவெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களைத் தேடி, அவர்களது உறவினர்கள் மருத்துவமனைகளில் அலைமோதிவரும் நிலையில், காத்மாண்டுவில் உள்ள டீச்சிங் மருத்துவமனைக்கு வரும் உறவினர்கள், காணாமல் போனவர்களின் விவரங்களைப் புகைப்படங்களுடன் ஒட்டி வருகின்றனர்.
நேபாளப் பெருவெள்ளத்தில் சிக்கி இன்னும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போன நிலையிலேயே இருக்கின்றனர். அவர்களைத் தேடி உறவினர்கள் ஒவ்வொரு மருத்துவமனையாகவும், அரசு அலுவலகங்களுக்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
த்மாண்டுவில் உள்ள டீச்சிங் மருத்துவமனை. இந்த மருத்துவமனை காத்மாண்டுவில் மிக முக்கியமான மருத்துவமனையாகப் பார்க்கப்படுகிறது. இந்த மருத்துவமனையிலும் மீட்கப்பட்ட ஏராளமானோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், உயிரிழந்தவர்களின் உடல்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: நேபாளையே சூறையாடிய பெருவெள்ளம்... காலையிலேயே பேரிடியை இறக்கிய செய்தி... இந்தியர்களின் நிலை என்ன?
இந்த நிலையில், மருத்துவமனைக்கு வரும் உறவினர்கள், காணாமல் போன தங்களது உறவினர்களின் விவரங்களைப் புகைப்படங்களுடன் இங்கு ஒட்டி வைத்துள்ளனர்.
கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்குச் செல்பவர்கள் நேபாளத்தைக் கடந்து சீனாவின் திபெத் பகுதிக்குள் நுழைந்ததும், அங்கு உள்ள குடியேற்ற அலுவலகத்தில் சோதனை நடைபெறும். அந்த இடத்தில்தான் அவர்கள் கடைசியாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் எந்த சுற்றுலா முகமை மூலம் வந்தார்கள் என்ற தகவலும் இதில் இடம்பெற்றுள்ளது. அதேபோல், இந்த நபரைப் பொறுத்தவரைக்கும், அவருடைய அனைத்து விவரங்களும் இங்கு ஒட்டப்பட்டுள்ளன.
இங்கு இந்தியர்களின் விவரங்கள் ஒட்டப்பட்டிருப்பதைப் போலவே, பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களின் உறவினர்களும் காணாமல் போனவர்களின் விவரங்களை இங்கு ஒட்டியுள்ளனர்.
நேபாளம், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த காணாமல் போனவர்களின் விவரங்களும் இங்கு ஒட்டப்பட்டுள்ளன. அனைவருடைய தகவல்களும் அவர்களது உறவினர்களால் இங்கு வந்து பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், இவர்களை யாரேனும் பார்த்திருந்தால் தங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறும், அதற்கான தொலைபேசி எண்களும் ஒட்டப்பட்டுள்ளன.
காணாமல் போன நபரின் முகவரி, அவருடைய பெயர், அவரைக் கண்டுபிடித்தால் தொடர்புகொள்வதற்கான தொலைபேசி எண்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் மருத்துவமனை முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.
இதில் சில ராணுவ வீரர்களின் விவரங்களையும் காணப்படுகிறது. அதேபோல், பல்வேறு நபர்களின் விவரங்களும் அங்கு இடம்பெற்றுள்ளன. இவர்களில் பெரும்பாலானவர்கள் நேபாளத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். அதேபோல், அரசு ஊழியர்கள் சிலரும் காணாமல் போயுள்ளனர். அவர்களது தகவல்களும் அவர்களது உறவினர்களால் இங்கு ஒட்டி வைக்கப்பட்டுள்ளன.
அனைத்து வயதினரையும் சேர்ந்தவர்களின் விவரங்களையும் பார்க்க முடிகிறது. இந்த நபரைப் பொறுத்தவரை, இவர் ரசுவாவில் உள்ள ஒரு பாலத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து வந்திருக்கிறார். தற்போது அவர் காணாமல் போயிருக்கிறார்.
அதேபோல், மற்றொரு இந்தியப் பெண்மணி கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு வந்திருந்த நிலையில் காணாமல் போயிருக்கிறார். அவர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். அவருடைய அனைத்து விவரங்களும் மருத்துவமனை வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ளன.
ஒருபுறம், அவர்களுடைய உறவினர்களின் தகவல்கள் ஒட்டப்பட்டிருந்தாலும், மறுபுறம் இந்தப் பெருவெள்ளப் பாதிப்பில் சிக்கி மீட்கப்பட்டவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மீட்கப்பட்டவர்களின் விவரங்களும் இங்கு சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. இங்கு வரும் உறவினர்கள் நேரடியாக மருத்துவமனை அலுவலர்களைத் தொடர்புகொண்டு, தங்கள் உறவினர்களின் விவரங்களைக் கூறி, அவர்கள் இங்கு இருக்கிறார்களா, மீட்கப்பட்டிருக்கிறார்களா என்பது குறித்த தகவலையும் தொடர்ந்து கேட்டறிந்து வருகின்றனர்.
அதேபோல், இந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களும் இங்கு உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன. உறவினர்கள் அடையாளம் கண்டவுடன், அந்த உடல்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடரான பெருவெள்ளத்தில் சிக்கி பலியானவா்கள் எண்ணிக்கை 788 ஆக உயர்ந்துள்ள நிலையில், பெருவெள்ளத்தில் காணாமல் போன 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது
இதையும் படிங்க: உலகையே உலுக்கிய கோரம்... நேபாளம் பெரு வெள்ளத்திற்கு காரணம் இதுவா?... வெளியானது அதிர்ச்சி தகவல்...!!