நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீண்டும் சோசியல் மீடியாவில் தனது செயல்களுக்காக வைரலாகி வருகிறார். கடந்த மாதம் நாம் தமிழர் கட்சி உழவர் பாசறை சார்பில் தூத்துக்குடியில் கள் இறக்கும் போராட்டம் நடத்தினார். டீசர்ட் சாக்ஸ் அணிந்து, மூங்கில் படிக்கட்டு கட்டிய பனைமரத்தில் ஏறி கள் இறக்கிய சீமானை கழுவி ஊற்றாத நெட்டிசன்கள் கிடையாது.
இதனால் கடுப்பாகிப் போன உண்மையாக மரம் ஏறத் தெரிந்த பலரும், வீடியோக்களை வெளியிட்டு சீமானுக்கு சவால் விட்டனர். அடுத்ததாக ஆடு, மாடு மாநாடு நடத்தி தெறிக்கவிட்டார். அங்கும் மாலை போட போன சீமானை மாடு ஒன்று எட்டி உதைக்க வருவதும், அவர் ஓடி வேறு ஒருவர் முதுகுக்கு பின்னால் ஒழிந்து கொள்ளும் வீடியோ வெளியாகி வைரலானது.

இப்படி சகட்டுமேனிக்கு நெட்டிசன்களால் கலாயக்கப்பட்டு வரும் சீமான், அடுத்ததாக தனது மாடு மேய்க்கும் போராட்டத்திலும் தொக்காக சிக்கியுள்ளார். கால்நடைகளை வளர்க்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மாடு மேய்க்கும் போராட்டம் நடத்திய சீமான், அதற்காக அணிந்து வந்த உடை தான் மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: விஜயகாந்துக்கு இல்லாத எழுச்சியா விஜய்க்கு வர போகுது? பிசாசுக்கு மாற்று பேயா.. சீமான் கடும் விமர்சனம்!
டார்க் பச்சை நிறத்தில் டீ ஷர்ட், டிராக் மற்றும் லைட் கிரீன் அண்ட் பிளாக் கலர் ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து கையில் கம்புடன் விறுவிறுவென சீமான் மாடு மேய்க்கும் போராட்டம் நடத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் என்ன சிக்கல் என்றால், சீமான் அணிந்திருக்கும் அந்த டீ ஷர்ட்டின் விலை 1,999 ரூபாயாம், ஷூ விலை 19 ஆயிரத்து 099 ரூபாயாம். இதனை சம்பந்தப்பட்ட ஆன்லைன் தளத்தின் விலைப்பட்டியலுடன் வெளியிட்டுள்ள நெட்டிசன்கள் இவ்வளவு காஸ்ட்லியான மாடு மேய்ப்பவரை எங்காவது பார்த்திருக்கிறீர்களே மக்களே? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: பேரிகாடுகளை தூக்கியெறிந்து அட்ராசிட்டி... தடையை மீறி கம்புடன் சென்ற சீமான் மீது பாய்ந்தது அதிரடி நடவடிக்கை...!