காஷ்மீர் மாநிலம் பகல் காம் பகுதியில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை சுற்றுலாப் பயணிகள் இயல்பாக எடுத்திருந்த வீடியோக்கள் மூலம் அடையாளம் கண்டனர். சமீபத்தில் ஜிப் லைனில் செல்லும் சுற்றுலா பயணி ஒருவர் இயல்பாக எடுத்த வீடியோ ஒன்றில் தீவிரவாதிகள் அப்பாவி மக்களை சுட்டுக் கொன்ற காட்சிகள் இடம் பெற்று இருந்தன. காண்போரை பதைப்பதைக்க செய்த இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

இந்த நிலையில் பகல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக கூடுதல் தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் ஏதேனும் இருந்தால் சுற்றுலா பயணிகளும், பார்வையாளர்களும் மற்றும் உள்ளூர் மக்களும் உடனடியாக பகிருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 9654958816 என்ற மொபைல் எண் அல்லது 01124368800 என்ற லேண்ட்லைன் எண்ணில் தொடர்பு கொண்டு, தங்கள் தனிப்பட்ட விவரங்களையும், அவர்கள் பகிர்ந்து கொள்ள விரும்பும் தகவல் அல்லது உள்ளீடுகளின் விவரங்களையும் வழங்குமாறு NIA வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நாகரீக சமூகத்தில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை...டிகேஎஸ் இளங்கோவன் ஆவேசம்!

பின்னர் ஒரு மூத்த NIA அதிகாரி அழைப்பாளருடன் தொடர்பு கொண்டு, தொடர்புடைய தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை என் ஐ ஏ நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ள ஏற்பாடு செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எதிரியாக மாறிப்போன நண்பர்கள்..! தனிமைப்படுத்திய உலக நாடுகள்..! பரிதாபத்தில் பாகிஸ்தான்..!