பள்ளி மாணவர்கள் வன்முறைகளில் ஈடுபடுவது திமுக அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்துவது தமிழக அரசியல் சூழலில் இது ஒரு முக்கியமான விமர்சனமாக எழுந்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில், குறிப்பாக 2021இல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பள்ளி மாணவர்களிடையே ஏற்படும் சில வன்முறை சம்பவங்கள், கத்தி மோதல்கள், சாதி அடிப்படையிலான தகராறுகள், போதைப்பொருள் தொடர்பான சச்சரவுகள் போன்றவை அரசின் கட்டுப்பாட்டு திறன் மீது கேள்விகளை எழுப்பியுள்ளன.
இந்த வன்முறை போக்குகள் பெரும்பாலும் அரசுப் பள்ளிகளிலும், கிராமப்புறப் பகுதிகளிலும் அதிகம் பதிவாகின்றன. உதாரணமாக, சில பள்ளிகளில் மாணவர்கள் கையில் கத்திகள் அல்லது போதைப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவங்கள், அரசுப் பள்ளி மாணவர்களிடம் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், மதுரை ஜீவா நகரில் ஐந்து பள்ளி மாணவர்கள் இணைந்து பெட்ரோல் குண்டு வீசியதுடன், கைகளில் பயங்கர ஆயுதங்களுடன் தெருக்களில் உலவும் CCTV காணொளிகள் நெஞ்சை பதைபதைக்க வைப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் அவல ஆட்சியில் படிக்கும் மாணவர்கள் ரவுடிகளாக உருமாறிக் கொண்டிருப்பது நமது சமூகத்திற்குப் பேராபத்தானது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த லட்சணத்தில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பெயரில் விளம்பர விழா திமுகவினர்எடுத்துக் கொண்டாடுகின்றனர் என்று சாடினார்.
இதையும் படிங்க: MLA பழனியாண்டி மீது FIR போடுங்க... கோர்ட்டுக்கு போவோம்... பாஜக வழக்கறிஞர்கள் மனு..!
அரசுப் பள்ளிகளும், படிக்கும் மாணவர்களும் இப்படிக் கெட்டுச் சீரழிந்து கொண்டிருப்பதைக் காணும் நமக்கு தான் நெஞ்சம் பதறுகிறதே தவிர, சம்பந்தப்பட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியோ சாவகாசமாகக் கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது என்று தெரிவித்தார். பள்ளி மாணவர்களை இப்படிப் பாழுங்குழியில் தள்ளிய திமுக அரசு நாட்டிற்கே கேடானது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தொங்கியது இபிஎஸ் தலை தான்... திமுக ராணுவ கட்டுப்பாட்டோடு இருக்கு... சேகர்பாபு பதிலடி..!