சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அரசு பணி நியமனங்களில் ஒருபோதும் லஞ்சம் பெறப்படாது என்று உறுதியளித்தார். நியமனங்களில் மெரிட் முறை மட்டுமே பின்பற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தகுதி அடிப்படையில் மட்டும் தான் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
நீதித்துறையில் அரசு வழக்கறிஞர்கள் நேர்மையாக நியாயமாக நியமிக்கப்பட இருக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சி காலத்தில் உயர் பதவிக்காக பணம் பெற்ற குற்றச்சாட்டு இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் கைக்கூலியை வைத்துக்கொண்டு அதிமுகவினரிடம் ஆசை வார்த்தை காட்ட வேண்டாம் என்று கூறினார்.

உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல் அடிப்படையில் முறையாக நியமனங்கள் இருக்கும் என்றார். கோர்ட் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் ஏழை எளியவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அரசு செயல்படுகிறது எனவும் தெரிவித்தார். நீதிமன்றங்கள் வழிகாட்டு முறை கொடுத்திருந்தாலும் அதனை சிறப்பாக செயல்படுத்தும் இடத்தில் ஆட்சியாளர்கள் உள்ளனர் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கரூர் ஆகட்டும், கோவை ஆகட்டும்... தவறு செய்தால் விடமாட்டோம்”..! அமைச்சர் நிர்மல் குமார் கடும் வார்னிங்.!
மூடப்பட்ட குவாரிகளின் உரிமையாளர்கள் எந்த முறையில் எங்களிடம் வந்தாலும் தங்களை சரி கட்ட முடியாது என்று கூறினார். மேகதாது விவகாரத்தில் அணை கட்டுவதை சட்டபூர்வமாக தடுப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுப்போம் என்று தெரிவித்துள்ளார். திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்கும் இயன்றதாக கூறப்படுவதால் தான் கட்சியிலிருந்து விலகுகின்றனர் என்று எடுத்துரைத்தார். தமிழக வெற்றி கழகத்தினரால் எங்கேயும் எந்த பேரமும் பேசப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் உயருகிறதா மின்கட்டணம்...? - மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன அதிரடி விளக்கம்...!