தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. இதனையடுத்து திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் தேர்தல் பிரச்சாரத்தை வேல் பிடித்தவாறு முருகன் பக்தி பாடல் பாடி தனது பிரச்சாரத்தை தொடங்கினார். திருத்தணி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சந்திரனை ஆதரித்து அவர் பேசினார்.
அப்போது எல்லா கட்சிகளும் கூட்டணிகள் அமைத்து தேர்தல் சந்திக்கின்றன. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து தேர்தலை தனியாக சந்தித்து வருகிறோம். இத்தேர்தல் காலம் நமக்கு தந்துள்ள பெரிய வாய்ப்பு. ஓட்டுக்கு பணம் கொடுப்பதில் இருந்து தொடங்குகிறது லஞ்சம். அதனை எதிர்த்து தான் நாங்கள் போராடுகிறோம். நாங்கள் அரசியலுக்கு வந்துள்ளது பிழைக்க அல்ல உழைக்க. மக்கள் பதவிக்காக அல்ல.. உதவிக்காக. பெருமைக்காக அல்ல... எம் மண் பெருமைக்காக எனக்கூறினார்.
தேர்தலில் அரசியல் கட்சிகளின் சீட்டு பேரம் எப்படியல்லாம் நடக்கிறது என்று பார்த்திருப்பீர்கள். அப்படி என்றால் 36 லட்சம் வாக்கு வங்கி பெற்றுள்ள எங்களுக்கு எந்த அளவிற்கு நெருக்கடி இருக்கும். ஒட்டுக்கு பணம் தராமல், கொள்கைக்காக போராடும் நா.த.க வை நம்பி நல்ல ஆட்சி வர வேண்டும் என்று மக்கள் விரும்புவதால் தான் தொடர்ந்து போராடும் சொந்த பிள்ளைகளை என் மக்கள் கைவிட மாட்டார்கள் என்று நம்பிதான் தேர்தலில் போட்டியிடுகிறோம்.
இதையும் படிங்க: முதல் ஆளாக ஆட்டத்தை ஆரம்பித்த சீமான்... கையில் வேலுடன் சொன்ன அதி முக்கிய தகவல்...!
இலவசங்கள், லஞ்சம், ஊழலை மாற்ற காலம் தந்துள்ள வாய்ப்பு தேர்தல். இலவசங்கள், லஞ்சம் இல்லா ஆட்சி மலர்ந்திட நாதகவை ஆதரித்து வெற்றி பெற செய்ய வேண்டும். மேலும் சம வேலை, சம உரிமைக்காக ஆசிரியர்கள் போராடி வருகிறார்கள், மாணவர்கள் போராடுகிறார்கள். உயிரை காக்க மருத்துவ பெருமக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள், தூய்மை பணியாளர்கள் போராடுகிறார்கள், செவிலியர்கள் போராடுகிறார்கள் அனைத்து போராட்டங்களிலும் நாம் தமிழர் கட்சி பங்கேற்றுள்ளது என்றார்.
அப்போது “ஓட்டுப் போடப்போற பெண்ணே கலங்கி நிற்காதே.. உழைக்கும் மக்கள் சின்னம்... அது விவசாயி சின்னம்...” என பாடல் பாடி விவசாயி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். முடிவில் திருத்தணி சட்டமன்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திரன் சீமானுக்கு 5 அடி உயர வேல் வழங்கினார்.
இதையும் படிங்க: பெரம்பூரில் மண்ணை கவ்வும் விஜய்? சீமான் நிலை என்ன? கலங்கடிக்கும் கருத்து கணிப்பு..!!