கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் 20 அம்ச கோரிக்கைகளான பழைய ஓய்வூதிய திட்டம், காலம் முறை ஊதியம், டாஸ்மார்க் பணியாளருக்கு பணி நிரந்தரம், பொது விநியோகத் திட்டத்தில் அத்தியாவாசிய பொருட்களை சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலங்களாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, விருத்தாசலம் பொன்னேரி புறவழிச் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபலாகத்தில் கோரிக்கை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் திறப்பு அமைப்பாளராக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் பாலு ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்பொழுது சீமான் பேசியதாவது: தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் எல்லா போராட்டங்களுக்கும் நாங்கள் பங்கேற்று இருக்கிறோம். தற்போது ஆளுங்கட்சியா இருக்கின்ற இவர்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் போதும் இவர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்று இருக்கிறார்கள். பகுதிநேர ஆசிரியர் போராட்டத்திற்கு, சம வேலைக்கு சமஊதியம் போராட்டத்திற்கு, பழைய ஓய்வு ஊதிய திட்டத்திற்கு எல்லாவற்றிற்கும் போராட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஈடுபட்டார் வெற்று வாக்குறுதிகளை கொடுத்து அதிகாரத்திற்கு வருகிறார்கள் மக்களின் கோரிக்கையை ஏற்று நிறைவேற்றவில்லை.
தமிழ்நாட்டில் உற்பத்தியாளரும் விற்பனையாளரும் ஒரே ஆளாய் இருக்கும் துறை என்றால் அது சாராயத் துறை தான். கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் கொடுத்த ஒரே ஆட்சி இந்த ஆட்சி தான். நடிகன் வந்தால் கூட்டத்தில் பார்க்க போய் செத்துப் போனால் அதற்கு 10 லட்சம் ஒன்னு குடித்து சாவு, இல்ல கூத்தாடியை பார்க்கச் சென்று சாவு நாட்டுப் பாதுகாப்புக்காக ராணுவத்தில் சேர்ந்து இறந்தால் அதற்க்கு பத்து லட்சம் தர மாட்டார்கள். இந்த நாட்டின் விடுதலைக்காக தூக்கில் தொங்கியவர்கள் எங்கு புதைக்கப்பட்டார்கள் என்று தெரியாது ஆனால் உலக புகழ்பெற்ற கடற்கரையில் 2 ஏக்கரில் இரண்டு பேர் படுத்து இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: என்ன ஒரு புத்திசாலித்தனம்? - ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் பங்கேற்றது ஏன்? - யாருமே எதிர்பார்க்காத பதில் கொடுத்த சீமான்...!
எஸ்.ஐ.ஆர் என்ற பெயரில் உயிரோடு இருப்பவர்களை இறந்தவர்கள் பட்டியலில் சேர்த்து வருகின்றனர்கள் அவர்கள் இறந்தவர்கள் பெயரை பட்டியலில் இருந்து நீக்க வந்ததற்கு உயிரோடு இருப்பவர்களை நீக்கி வருகிறார்கள். தேர்தல் வரும் பொழுது தான் 36 லட்சம் பேர் விடுபட்டு இருக்கிறார்களா? மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவார்களா தேர்தல் வரும் போது தான் அவர்கள் ஓட்டுக்காக எல்லாம் செய்வார்கள். நாங்கள் விளைவைக்கும் நெல்லை முளைக்க விடுகிறீர்கள், ஆனால் பொங்கலுக்கு ஆந்திராவில் இருந்து அரிசி வாங்குகிறீர்கள்.
வாக்குக்கு காசு கொடுத்தால் வாக்கை வாங்கிவிடலாம் என்று நிலைமை உருவாகிவிட்டது. அப்போது இருந்த மக்கள் வாக்கு செலுத்துவர்கள் வாக்காளர்கள் இருந்தார்கள் தங்களுக்கான ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்தனர். இன்று ஆட்சியாளர்கள் தங்களுடைய வாக்காளர்களை தேர்ந்தெடுக்கின்றனர். அதுதான் இந்த சிறப்பு வாக்காளர் திருத்தம்.
பள்ளி மாணவர்கள் டாஸ்மாக் கடையில் வந்து மது வாங்குகிறார்கள் என்று டாஸ்மார்க் ஊழியர்கள் என்னிடம் கூறினார்கள். இதனை எப்படியாவது மூடு என்று கூறினார்கள் நான் கேட்டேன் உங்களுக்கு வேலை என்னாகிறது என்று கேட்டேன் நாங்கள் பிச்சை எடுத்தாவது பிழைத்து கொள்கிறோம் என்று கூறினார்கள். டாஸ்மார்க் பணியாளர்களுக்கு நிரந்தர வேலை நான் உறுதி தர முடியாது நான் உங்கள் கோரிக்கையை ஏற்று போராடுகிறேன். ஆனால் நானும் தான் குடிப்பேன். மாற்று வேலை கொடுக்கிறேன். கல்விக்கேற்ற வேலை தருகிறேன். சாராயம் கிடையாது. மாற்று வேலை இருக்கிறது, வேலை இல்லை என்ற சொல்லே தமிழ்நாட்டில் இருக்காது. எனக்கு ஓட்டு போடுங்க போடாம இருங்க யோசித்து போடுங்கள் பாத்திரம் அறிந்து பிச்சை போடுங்க வேற யாருக்காக போட்டு எங்களை மீண்டும் போராட கூப்பிடாதீர்கள் என்று இவ்வாறு பேசினார்.
இதையும் படிங்க: சிவனும், முருகனும் இந்து கடவுளா? குன்னக்குடிக்கே அன்னக்காவடி எடுத்தாலும் உங்க ஆட்டம் எடுபடாது..! சீமான் திட்டவட்டம்...!