சேலத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று இரவு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேவையான நேரத்தில், தேவையான அரசியல் கருத்துகளை தொடர்ந்து கூறி வருகிறேன். என்னைப் பொறுத்தவரை அதிமுகவில் பிரிந்து சென்ற அனைவரும் ஓரணியில் சேர்ந்தால் மட்டுமே தமிழகத்தில் வெற்றி பெறுகின்ற சூழ்நிலை உருவாகும். இதுதான் என்னுடைய நிலைப்பாடு. இதை மற்றவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா உருவாக்கிய இயக்கம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். அதிமுகவை எம்ஜிஆர், மக்கள் இயக்கமாகத் தான் உருவாக்கினார். அதனை ஜெயலலிதா திறம்பட வழி நடத்தினார். அந்த வழியில் வந்த இயக்கத்தை யாராவது பிளவுபடுத்த நினைத்தால் அது முடியாது. அதிமுக இயக்கத்துக்கு எந்த பின்னடைவும் ஏற்படாது. அதிமுகவை தலைவர்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடத்தினார்கள். தற்போது அது கேள்விகுறியாகியுள்ளது. அதற்காக தான் நீதிமன்றத்தை நாடியுள்ளோம் என்றார்.
கூட்டணி குறித்த கேள்விக்கு , தேர்தலின் போது தான் தெரியும். அதற்கு இன்னும் ஒன்பது மாதங்கள் உள்ளன. திமுகவின் நான்கரை ஆண்டு ஆட்சி கால செயல்பாடு குறித்து நான் தினந்தோறும் அறிக்கையாக வெளியிட்டு வருகிறேன். திமுகவின் தவறுகளை தொடர்ந்து சுட்டிகாட்டி வருகிறேன்.
இதையும் படிங்க: தலைமைப் பண்பு இல்லைன்னா தோல்வி நிச்சயம்... எடப்பாடியை வசைப்பாடிய ஓபிஎஸ்!
கட்சி தொடங்கிய ஒவ்வொருவரும் நாங்கள் முதல்வராக வருவோம் என்று தான் ஆசைப்படுவார்கள். அதே நேரத்தில் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள், அரசியல் நாகரிகம் கருதி பேச வேண்டும். பெருந்தன்மையோடு பேச வேண்டும். மதுரை மாநாட்டில் விஜய் பேசிய சில கருத்துக்கள் ஏற்புடையதல்ல என்றார்.
இதையும் படிங்க: “அவரு வர்ல, உங்களுக்கு எதுவுமே இல்ல” ... டிடிவி-க்கு ஸ்ட்ரிக்ட்டாக உத்தரவு போட்ட பாஜக தலைமை... இபிஎஸுக்கு எதிராக அசைன்மெண்ட்...!