ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் காஷ்மீர் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு முசாஃபராபாத்தில் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் சட்டப்பேரவை சிறப்பு அமர்வில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷரீஃப் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 2019 ஆம் ஆண்டு ஐநா விற்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் ஆயுத குவிப்பு ஒருபோதும் அமைதிக்கு வழிவக்காது என்றும் காஷ்மீர் பிராந்திய மக்களின் வாழ்க்கையை மாற்றாத என்றும் முன்னேற்றத்துக்கான வழி அமைதி மட்டுமே என்றுக் கூறி லாகூர் பிரகடனத்தை மேற்கோள் காட்டினார். காஷ்மீர் பிரச்சனைக்கு ஒரே தீர்வாக கருதப்படுவது, ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தில் முன்மொழியப்பட்ட சுயநிர்ணய உரிமையே ஆகும். அதனால் காஷ்மீர் மக்கள் சுதந்திரமாக தீர்மானம் செய்ய அனுமதிக்க இந்தியாவிற்கு உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஐநா பொது சபை கூட்டத்தில் நீண்ட நேரம் உரையாற்றிய பிரதமர் ஷெபாஷ் ஷெரிஃப், காஷ்மீர் பிரச்சினையை குறித்து நீண்ட நேரம் உரையாற்றினார். அதில் அவர் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப்பிரிவை ரத்து செய்தது ஒரு தலைப்பட்சமான முடிவு என குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: ஐடி ஊழியர்களுக்கு ரூ.14.5 கோடி பம்பர் போனஸ்… ரொக்கமாக அறிவித்த கோவை ஐடி நிறுவனம்..!
அதனைத் தொடர்ந்து, இந்தியா சார்பில் தூதரக அதிகாரி பவிக்கா மங்களாநந்தன், பாகிஸ்தான் பிரதமர் செபாஸ் ஷெரிபின் காஷ்மீர் பிரச்சனைகள் குறித்த கருத்து கேலிக்கூத்தானது என்றும் பாகிஸ்தான் இந்திய பகுதிகளை ஆக்கிரமிக்க விரும்புகிறது என்றும் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியான ஜம்மு காஷ்மீரில் தேர்தலை சீர்குலைக்க பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதாக தக்க பதிலடி கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் நீண்ட காலமாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அண்டை நாடுகளுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது என்றும், அத்தகைய நாடு வன்முறையை பற்றி பேசுவது பாசாங்குத்தனம் என்றும் சாடினார்.
இந்நிலையில், இந்தியாவிற்கு எதிரான எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை அவ்வப்போது இந்தியா பாகிஸ்தானுக்கு உணர்த்தி வரும் நிலையில், தற்போது பாகிஸ்தான் பிரதமர் சபாஷ் ஷரீஃப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருப்பது பிரச்சனையை பூசி மொழுவும் செயலாகவே உள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்
இதையும் படிங்க: வருகிறது லைப் டைம் பாஸ், வருஷ பாஸ்.. இனி டோல்கேட்டில் காத்திருக்கத் தேவையில்லை