பிஷ்கெக்: கிர்கிஸ்தானில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புகள் சர்வதேச அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் 26-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ரஷியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடி வருகிறார்.
இந்த நிலையில், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை பிரதமர் மோடி சந்தித்தார். இரு தலைவர்களும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் ரஷியா இடையேயான உறவு தொடர்ந்து முக்கியத்துவம் பெற்று வரும் நிலையில், இரு தலைவர்களின் சந்திப்பு அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: வெளிநாடு செல்லாதீங்க! தங்கமும் வாங்காதீங்க! பிரதமர் மோடி ரீல்ஸ் மூலம் அதிரடி வேண்டுகோள்!
இதைத்தொடர்ந்து சீன அதிபர் ஜின்பிங்கையும் பிரதமர் மோடி சந்தித்தார். இரு தலைவர்களும் சந்தித்து பேசிக் கொண்டதுடன், இரு நாடுகளுக்கு இடையேயான முக்கிய விவகாரங்கள் குறித்தும் கருத்துகளை பரிமாறிக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின்போது இந்தியாவில் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க சீனாவுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்புக்கு சீன அதிபர் ஜின்பிங் நன்றி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், பிரிக்ஸ் அமைப்புக்கு இந்தியா தலைமை வகிப்பதற்கு சீனா தனது ஆதரவை தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்தியா நடத்த உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் சீனாவின் பங்கேற்பு தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு நடைபெறும் சூழலில் மோடி, புதின் மற்றும் ஜின்பிங் ஆகியோரின் சந்திப்புகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. குறிப்பாக, இந்தியா–சீனா உறவில் பல்வேறு விவகாரங்கள் பேசப்பட்டு வரும் நிலையில், இரு நாட்டு தலைவர்களின் நேரடி சந்திப்பு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதேபோல், ரஷியாவுடனான இந்தியாவின் நீண்டகால உறவும் சர்வதேச அரசியல் சூழலில் முக்கியமானதாக உள்ளது. இதனால் ஒரே சர்வதேச மாநாட்டில் பிரதமர் மோடி ரஷிய மற்றும் சீன அதிபர்களை சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இதையும் படிங்க: உலக பொதுமறை திருக்குறள்! அதை உஸ்பெக் மொழியில் மொழிபெயர்க்கலாமே! தாஷ்கன்ட் பல்கலையில் பிரதமர் மோடி பேச்சு