பாமக நிறுவனர் ராமதாஸுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்த விவகாரத்தில் அன்புமணி தரப்பு மிகுந்த கடுப்பில் உள்ளதாம். ஜூலை 25ம் தேதி ராமதாஸ் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. பல அரசியல் கட்சி தலைவர்களும் ராமதாஸுக்கு தங்களது வாழ்த்துக்களை தொலைபேசி வாயிலாகவும், சோசியல் மீடியா வாயிலாகவும் தெரிவித்தனர். அதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் ஒருவர். அவர் தனது வாழ்த்து செய்தியில் ராமதாஸை பாமக நிறுவன தலைவர் என குறிப்பிட்டிருந்தார். இந்த வார்த்தை தான் அன்புமணியையும், அவரது ஆதரவாளர்களையும் எரிச்சல் அடைய வைத்துள்ளது.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியோட வாழ்த்துச் செய்தியில் ராமதாஸை நிறுவன தலைவர் எனக்குறிப்பிட்டுள்ளது அதிருப்திக்கு காரணமாக அமைந்துள்ளது. ஏனெனில் பாமகவைப் பொறுத்தவரை நான் தான் தலைவர் என்பதில் அன்புமணி உறுதியாக இருக்கிறார்.
பாமகவில் அப்பா மகன் இடையில் பிரச்சனை வெடித்ததே இந்த பதவிக்குத் தான். பாமகவுக்கு இனி நானே நிறுவனராகவும், தலைவராகவும் செயல்படுவேன்; அன்புமணி செயல் தலைவராகவும், கவுரவத் தலைவராக ஜிகே மணியும் செயல்படுவார்கள் என ராமதாஸ் அறிவித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. “கருணாநிதி பாணியில் நான் தலைவராக இருப்பேன். ஸ்டாலின் போன்று அன்புமணி செயல் தலைவராக இருக்க வேண்டும்” என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நடைபயணத்திற்கு தடையில்லை - அன்புமணிக்கு கிடைத்த ஹேப்பி நியூஸ்...!
இதற்கு பதில் அறிக்கை விட்ட அன்புமணி, “கட்சியின் தலைவராக முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருப்பதாகவும், அதனால் நான் தான் கட்சியின் தலைவராக செயல்படுவேன் ” என அடித்துக்கூறிவிட்டார். இப்படி அப்பா, மகன் இடையே சண்டை முற்றிக்கொண்டிருக்கும் நிலையில் தான், எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி/
இப்ப வரைக்கும் அதிமுக பொதைச்செயலாளர் நான்தான்னு சசிகலா சொல்லிக்கிட்டு இருக்காங்க. அப்படித்தான் அறிக்கைகளில் கூட கையெழுத்தும் போடுறாங்க. இது தொடர்பான வழக்குகள் இன்னும் நீதிமன்றத்தில நிலுவையில இருக்கறதுனால இனி நாங்க அதிமுகவுடைய பொதுச்செயலாளர் சசிகலான்னு சொல்லட்டுமா? என ஆவேசமாக அதிமுகவினரை நோக்கி எதிர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இதையும் படிங்க: அக்கா, அண்ணன் எல்லாரும் வரணும்! அழைப்பது அன்புமணி டா... பாமக உரிமை மீட்பு பயண பாடல் வெளியீடு..!