பாட்டாளி மக்கள் கட்சியில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவருக்கும் இடையே உட்கட்சி பூசல் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு குற்றசாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகத்தான் பாமாக்கா நிறுவனர் ராமதாஸ் சில தினங்களுக்கு முன்பாக தனது பெயரை அன்புமணி பெயருக்கு பின்னால் பயன்படுத்த கூடாது எனவும், தனது வீட்டின் அறையில் தனது பேச்சை ஒட்டு கேட்பதற்காக ஒட்டு கேட்கும் கருவி கண்டெடுக்கப்பட்டதாக பகீர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
சமீபத்தில் அன்புமணியின் உரிமை மீட்பு பயணத்திற்கு கூட ராமதாஸ் தரப்பில் இருந்து தடைகோரப்பட்டது. இதனிடையே, கடந்த ஜூலை 12ம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் டிஜிபி அலுவலகத்திற்கு புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதில், அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களிருந்து தனது சமூக வலைதல கணக்குகளை மீட்டு தரும்படியும், பாஸ்வேர்டுகள் உள்ளிட்ட தரவுகளை மீட்டு தரக்கோரியும் குறிப்பிட்டிருந்தார்.
இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சமூக வலைதளத்தில் அட்மினாக இருந்தாக கூறப்படும் பாவேந்தன் என்பவர் தற்போது அன்புமணி ஆதரவாளராக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் மூலம் முடக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவர்களிடம் ராமதாஸ் தரப்பு கேட்கும் ராமதாஸுக்கு உரிய பதில் கிடைக்காததாலும், காவல்துறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கததாலும் நாளையோ அல்லது நாளை மறுநாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்ய முடிவு செய்து அதன் தொடர்பான வேலைகளை செய்து வருவதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: அக்கா, அண்ணன் எல்லாரும் வரணும்! அழைப்பது அன்புமணி டா... பாமக உரிமை மீட்பு பயண பாடல் வெளியீடு..!
இதையும் படிங்க: அன்புமணிக்கு செக் வைத்த ராமதாஸ்! பாமக தலைமையகம் தைலாபுரத்துக்கு மாற்றப்படுவதாக அதிரடி அறிவிப்பு..!