கடந்த சில நாட்களுக்கு முன்பு பாமக நிறுவனர் ராமதாஸ் உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனைகள் எல்லாம் மேற்கொள்ளப்பட்டு, 2 நாட்கள் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்றார். அப்போது பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ராமதாஸை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
சொந்த மகனான அன்புமணியை சந்திக்காத ராமதாஸ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு வெறும் மரியாதை நிமிர்த்தமானது மட்டுமல்ல அரசியல் ரீதியாகவும் நடந்ததாக கூறப்படுகிறது. பாமகவில் அப்பா - மகன் இடையே சண்டை வெடித்ததில் இருந்தே ராமதாஸ் திமுக மீது அளவுக்கு அதிகமாக பாசம் காட்டி வருகிறார். அந்த பாசத்தின் வெளிப்பாடாக மருத்துவமனையில் தன்னை சந்திக்க வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் திமுக கூட்டணியில் பாமக இணைய விரும்புவதை ராமதாஸ் வெளிப்படுத்தியுள்ளார்.
அதற்கு திமுக கூட்டணிக்குள் பாமகவை சேர்க்க வேண்டும் என்பதில் தானும் ஆர்வமாகவே இருப்பதாக கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆனால் அதில் ஒரு சிக்கல் இருப்பதை தெளிவுப்படுத்தியுள்ளார். திருமாவளவன் சம்மதிச்சா மட்டுமே திமுக கூட்டணிக்குள்ள உங்களை சேர்க்க முடியும் என சொல்லியிருக்காராம். பாமக கூட்டணிக்குள் வர வேண்டும் என்பது தான் அறிவாலயத்தின் உண்மையான விருப்பம். ஆனால் நீண்ட காலமாக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன், பாமக, பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதில் தீவிரமாக இருக்கிறார். அதனை தனது கட்சியின் கொள்கை முடிவாகவே அறிவித்துவிட்டார்.
இதையும் படிங்க: குப்பை வண்டியில் கர்ப்பிணிகளுக்கு மருந்து... இவ்ளோ அலட்சியமா? விளாசிய அண்ணாமலை
விசிகவின் கொள்கை முடிவில் தலையிடவும் முடியாமல், பாமக கூட்டணிக்காக விசிகவை இழக்கவும் விரும்பாமல் இருதலைக் கொள்ளி எறும்பாக திமுக தவித்து வருகிறதாம். இதனால் திருமாவளவன் சம்மதித்தால் மட்டுமே பாமகவை கூட்டணிக்குள் சேர்க்க முடியும் என கறாராக சொல்லாமல் கொஞ்சம் கரிசனத்தோடு சொல்லியிருக்கிறதாம் திமுக.
ராமதாஸ் மேல அண்மை காலமாக திருமா எந்தவித எதிர்ப்பையும் காட்டவில்லை. அப்போலோவில இருந்த ராமதாசை எல்லோரும் நேர்ல போய் நலம் விசாரிக்க திருமா மட்டும் நேர்ல போறத தவிர்த்துட்டு தொலைபேசியில நலம் விசாரிச்சாரு. இன்னும் திருமாவுக்கு ஏதோ தயக்கம் இருக்குன்னு புரிஞ்சுகிட்டு தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ராமதாஸ் சந்திச்சதும், ரெண்டு பேரும் தனியா அரை மணி நேரம் அரசியல் பேசுனாங்க.
இப்போதைக்கு ராமதாஸ் அதிமுக பக்கம் போறதுக்கான வாய்ப்புகள் அதிகம்னு சொல்றாங்க. கூடவே பாஜகவோட தமிழக தேர்தல் பொறுப்பாளரும் அப்பல்லோவில் ராமதாஸை சந்திச்சதும் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக தான் என சொல்லுறாங்க.
இதையும் படிங்க: பெருமைமிகு அடையாளம்... ஜி.டி. நாயுடு உயர் மட்ட மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்...!