இடதுசாரிகளும் காங்கிரஸ் கட்சியும் ஆதிக்கம் செலுத்தி வரும் கேரளாவில் திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தலில் பாஜக பெற்றுள்ள வெற்றி பெரும் திருப்பு முனையாக கருதப்படுகிறது. கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் கடந்த 45 ஆண்டுகளாக தொடர்ந்து கோலோச்சி வந்த இடதுசாரிகளின் வெற்றி பயணம் முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து கேரளா மட்டுமல்ல, இந்தியா முழுவதும் ஸ்ரீலேகா ஐபிஎஸ் என்ற பெயர் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு காரணம், 2020 ஆம் ஆண்டு டிஜிபியாக இருந்து ஓய்வு பெற்ற ஸ்ரீலேகா சாஸ்தாமங்கலம் வார்டில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கேரளாவில் “ரெய்டு” ஸ்ரீலேகா என்றால் மிகவும் பிரபலம். முதலில் ரிசர்வ் வங்கியில் பணியாற்றி வந்த ஸ்ரீலேகா, 1987ம் ஆண்டு போலீஸ் துறையில் அடியெடுத்து வைத்தார். திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்த ஸ்ரீலேகா 1987 ஜனவரியில் கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியானார். 30 ஆண்டுகளுக்கும் அதிகமான தனது காவல்துறை வாழ்க்கையில் பல மாவட்டங்களில் காவல் பிரிவுகளுக்கு தலைமை தாங்கியுள்ளார். சிபிஐ, கேரள குற்றப்பிரிவு,விஜிலன்ஸ், தீயணைப்புத்துறை, மோட்டார் வாகனத்துறை மற்றும் சிறைத்துறை உள்ளிட்ட முக்கிய பிரிவுகளிலும் பணியாற்றியுள்ளார்.
2017ஆம் ஆண்டும் காவல்துறை இயக்குனராக பதவி உயர்வு பெற்றதன் மூலமாக, கேரளாவில் இந்தபதவியை பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெற்றார். சிபிஐயில் பணியாற்றிய காலத்தில் அவரது அச்சமற்ற சோதனைகள் மற்றும் ஊழல் எதிர்ப்பு நிலைப்பாட்டிற்காக “ரெய்டு” ஸ்ரீலேகா என்ற பெயரையும் பெற்றிருந்தார். 33 ஆண்டுகளுக்கு மேலாக பொதுப்பணியில் இருந்த அவர் டிசம்பர் 2020ல் ஓய்வு பெற்றார். இவரது சேவையை பாராட்டி கேரள அரசு கடந்த 2007ஆம் ஆண்டு விருதும் வழங்கி இருக்கிறது.
இதையும் படிங்க: #BREAKING: தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமனம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!
பிரதமர் மோடி அவர்கள் ஆட்சியின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் 2024 அக்டோபர் 9ஆம் தேதி அன்று பாஜகவில் இணைந்து குறுகிய காலத்திலேயே மாநில துணைத்தலைவர் பொறுப்பை அடைந்தவர். தற்போது நடந்துமுடிந்த கேரளா உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் சாஸ்தாமங்கலம் பகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற ஸ்ரீலேகா ஐபிஎஸஸை கட்சித் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இவங்கதான் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக பொறுப்பேற்க உள்ளதாக கேரளா பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இதன் மூலம் திருவனத்தின் மேயராக பாஜக சார்பில் பதவியேற்கவுள்ள முதல் மேயர் என்ற அந்தஸ்தை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் அவர் சட்டமன்ற தேர்தலில் களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த முறை மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்படவில்லை என்பதே ராஜேஷுக்கு சாதகமாக சொல்லப்படும் காரணம். ஸ்ரீலேகா ஐபிஎஸும் தானே மேயர் பதவியை எதிர்பார்க்கவில்லை. கவுன்சிலராக பணியாற்ற தயாராக இருக்கிறேன் என்று கூறியிருப்பதும் ஒரு அரசியல் சிக்னலாகவே பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பெரும் புகழுக்கு சொந்தக்காரர் பெரும்பிடுகு முத்தரையர்… அஞ்சல் தலை வெளியிட்டமைக்கு EPS நன்றி…!