புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி முதலமைச்சர் என். ரங்கசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து என்பதே ரங்கசாமியின் முதன்மை கருத்தாக இருந்து வருகிறது. இந்நிலையில், அது தற்போது ஆளுநருக்கும் அவருக்கும் இடையிலான பிரச்சனையாகவே உருவெடுத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேச சுகாதாரத்துறை இயக்குநராக நியமிக்க முதலமைச்சர் ரங்கசாமி ஒருவரின் பெயரை ஆளுநர் கைலாஷ் நாதனுக்கு பரிந்துரை செய்துள்ளார். ஆனால், ஆளுநர் அந்த நபருக்கு பதிலாக வேறு ஒருவரை நியமித்துள்ளார். இதற்கான ஆணையும் வெளியானது. இதைப் பார்த்து கடும் கோபமடைந்த ரங்கசாமி, தான் அமைச்சராக இருக்கும் ஒரு துறைக்கு தனக்கே தெரியாமல் ஒருவரை எப்படி நியமிக்க முடியும்? நான் எதற்கு அந்தப் பதவியில் இருக்க வேண்டும்? என்றெல்லாம் பேசியது சர்ச்சையைக் கிளப்பியது.
இதனால் தான் ராஜினாமா செய்யப்போவதாக முதலமைச்சர் ரங்கசாமி முடிவெடுத்துள்ளதாக கூறப்பட்டது. இதுகுறித்து இன்று ஆளுநர் கைலாஷ் நாதனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சிஎம்-க்கு உங்களுக்கு கருத்து வேறுபாடு காரணமாக மூணு நாள் அவர் அசம்பளிக்கு வரவில்லை எனக்கூறப்படுகிறது என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “எனக்கு அப்படி ஒன்னும் தோணலப்பா. அப்படி ஒன்னும் இல்லப்பா என பதிலளித்துள்ளார்.
இதையும் படிங்க: "VERY SORRY" நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட ஆணையர்... ரூ. 1 லட்ச அபராதம் ரத்து!
ஏற்கனவே முதலமைச்சராக இருந்த நாராயணசாமிக்கும் கிரண்பேடி அதாவது துணைந்த கிரண்பேடிக்கு இடையே மோதல் இருந்தது. கிட்டத்தட்ட நான்கு ஐந்து ஆண்டுகளாக அந்த ஆட்சி வந்து செயல்படாத நிலையில் தான் காணப்பட்டது. ஆனால் தற்பொழுது வந்து புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் முதலமைச்சருக்கும் தமிழிசையுடன் இருந்த இணக்கம் காரணமாக அரசு நல்ல முறையில் சென்று கொண்டிருந்தது. அதனை தொடர்ந்து கைலாஷ்நாதன் துணை ஆளராக வந்தார். அவருக்கும் முதலமைச்சருக்கும் முன்பு ஒரு நல்ல நெருக்கம் ஏற்பட்டது. நல்ல நட்புடன் தான் சென்று கொண்டிருந்தது.
ஆனால் சில மாதங்களாக முதலமைச்சருக்கும், ஆளுநருக்கும் இடையே ஒரு பனிபோர் நிலவுகிறது. பல்வேறு கோப்புகளை ஆளுநர் நிறுத்துவதாகவும், அரசின் மக்கள் நல திட்டங்களுக்கு தடையாக இருப்பதாகவும் மறைமுகமாக சில மேடைகளில் முதலமைச்சர் பேசி வந்தார். தற்பொழுது அது வெளியே வந்திருக்கிறது. சுகாதாரத்துறை இயக்குனர் நியமிப்பதில் கடுமையான வார்த்தையை முதலமைச்சர் பயன்படுத்தி இருக்கிறார். அதாவது வந்து ஒரு முதலமைச்சராக இருக்கும் தனக்கே தெரியாமல் ஒரு துறைக்கான இயக்குநரை நியமிப்பது எப்படி நியாயம் என கேட்டிருந்தார்.
இதையடுத்து கடந்த எட்டாம் தேதி முதல் மூன்று நாட்களாக முதலமைச்சர் தனது அலுவலகத்துக்கு வரவில்லை. அவருக்கு ஆதரவாக என்ஆர் காங்கிரஸ் அமைச்சர்கள் துணை சபாநாயகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டமன்றத்தில் உள்ள அலுவலகத்திற்கு செல்லவில்லை. அனைவரும் தற்பொழுது முதலமைச்சர் வீட்டில் காத்திருக்கிறார்கள் முதலமைச்சர் என்ன சொல்ல போகிறார் அவருக்காக அவருடைய கட்டளைக்காக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வேலை நேரத்தில் தூக்கம்.. 2 ரயில் கேட் கீப்பர்கள் டிஸ்மிஸ்..! தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு..!