தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை தீர்ப்பான அரசு முறை பயணமாக முதலமைச்சர் வெளிநாடுகளுக்கு சென்று உள்ளார். ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் செல்வதற்காக நேற்று காலை சென்னையில் விமான நிலையத்தில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் புறப்பட்டார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ஒரு வார கால பயணம் ஆகி ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார். செப்டம்பர் எட்டாம் தேதி தமிழ்நாட்டிற்கு திரும்ப உள்ளதாகவும் கூறினார்.

இந்த நிலையில் ஜெர்மனி சென்றமைந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜெர்மனியில் வசிக்கும் தமிழர்களின் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்பா ஸ்டாலின் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு வரவேற்றனர். தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோருக்கு பூங்கொத்துகளை கொடுத்து வரவேற்றனர்.
இதையும் படிங்க: #BREAKING: துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்ஷன் ரெட்டி தமிழகம் வருகை... யாரை சந்திக்கப் போகிறார் தெரியுமா?
ஜெர்மனி வாழ் தமிழர்கள் கொடுத்த வரவேற்பு தொடர்பான புகைப்படங்களை முதல்வர் பகிர்ந்துள்ளார். மேலும், ஜெர்மனி தமிழர்களின் வரவேற்பு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் நெகிழ்ந்து பேசி உள்ளார். ஜெர்மனி வாழ் தமிழர்களின் வரவேற்பு மனதை கவர்ந்ததாகவும் அவர்களை பாசத்தைக் கண்டு மகிழ்ந்ததாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டின் சிறப்புகளை எடுத்து கூறி முதலீடுகளை ஈர்த்து பிரகாசமான எதிர்காலத்தில் தமிழ்நாட்டிற்கு ஏற்படுத்த வேண்டும் என்ற பெருமையோடு வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அன்பு முத்தங்கள்! பெற்றோரின் திருமண நாளில் உதயநிதி உருக்கம்..!