நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற உள்ள மரங்களின் மாநாடு, தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஒரு முக்கியமான நிகழ்வாக அமைந்தது. இந்த மாநாடு, கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையின் முயற்சியால், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நேற்று திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அருங்குளம் கிராமத்தில் நடைபெற்றது. மரங்களோடு பேசுவோம் மரங்களுக்காகப் பேசுவோம் என்ற கருப்பொருளை முன்னிறுத்தி இந்த மாநாடு நடத்தப்பட்டது.
இதற்கு முன்பு ஜூலை 10 அன்று மதுரை விராதனூரில் நடைபெற்ற ஆடு, மாடுகளின் மாநாடு மூலம், மேய்ச்சல் நிலங்களின் உரிமைகளை வலியுறுத்தியது போலவே, இந்த மாநாடும் அமைந்தது.

மாநாட்டில் பேசிய சீமான், மக்கள் அரசியல், சேவை அரசியல் செய்பவர்களால் தான் இது போல மாநாடுகள் நடத்த முடியும் என்றும், செய்தி அரசியல், கட்சி அரசியல், தேர்தல் அரசியல் செய்பவர்களால் இதை செய்ய முடியாது என்றும் தெரிவித்தார். கலையை கொண்டாடுங்கள் என்றும் கலையை போற்றுங்கள் என்றும் ஆனால் எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். நல்லகண்ணு போன்றவர்கள் யார் என்பதை பற்றி தெரியாததால் தான் நடிகன் நாடாள துடிக்கிறான் என்றும் அவர்கள் பின்னால் நிற்கிறீர்கள் தினமும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விஜயகாந்தை போல் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்… நம்ம தயாராகனும்! டிடிவி தினகரன் பேச்சு..!
தமிழக வெற்றிக் கழகத்தையும் விஜயையும் தொடர்ந்து சீமான் விமர்சித்து வருகிறார். மீண்டும் மீண்டும் சீந்துவதால் தமிழக வெற்றி கழகத்தினர் கொந்தளித்து உள்ளனர். சீமான் மீது கடும் கோபத்தில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் சமூக வலைதளங்களில் வசைப்பாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: எலெக்ஷன்-காக என்ன வேணா பேசலாம்! கச்சத்தீவு எங்களோடது... விஜய்க்கு இலங்கை அமைச்சர் பதிலடி..!