நெடுஞ்சாலைகளில் துளையிட்டு சாலைகளை சேதப்படுத்தும் அதிமுகவினர் எடப்பாடி பழனிச்சாமி வருகைக்காக கோயில் நுழைவு வாயிலை மறித்து மேடை அமைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்தோடு எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் அந்த வகையில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று வருகை புரிந்தார். கந்தர்வகோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கியில் இன்று பேசும் எடப்பாடி பழனிச்சாமி நாளை புதுக்கோட்டை, விராலிமலை, திருமயம் உள்ளிட்ட இடங்களில் உரையாற்றுகிறார். இந்த நிலையில் அவர் வருகைக்காக விராலிமலை-மதுரை சாலையில் சாலையை நோண்டி ஆர்ச் அமைக்கப்பட்டு உள்ளது மேலும், முருகன் மலைக்கோயில் நுழைவாயிலை மறைத்து மேடை அமைக்கப்பட்டுள்ளது.
ஆங்காங்கே சாலைகளின் இருபுறத்திலும் துளையிட்டு அதிமுக கொடி நட்டு வைக்கப்பட்டுள்ளது. அதோடு பிளக்ஸ் பேனர்களும் சாலைகளில் துளையிட்டு வைக்கப்பட்டுள்ளது இது பொதுமக்கள் மத்தியில் வேதனை ஏற்படுத்தி உள்ளது அரசியல் தலைவர்கள் பிரச்சாரத்திற்காக வந்து போவது சகஜமான நிலை என்றாலும் மக்கள் பயன்படுத்தும் அரசு சொத்துக்களை சேதப்படுத்துவது ஏற்க முடியாத செயல் என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆஹா...கொஞ்சம் சூதானாமா தான் இருக்கணும் போல! சண்டையில் கணவனின் நாக்கை கடித்து விழுங்கிய மனைவி...
இதனிடையே, கந்தர்வகோட்டையிலிருந்து புதுக்கோட்டைக்கு செல்லும் வழியில் பல்வேறு இடங்களில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்று அதிமுகவினர் சாலை ஓரங்களில் ஏராளமான விளம்பர பதாகைகளை வைத்துள்ள நிலையில் தற்போது அப்பகுதியில் அதிக காற்று வீசி வருவதால் அந்த சாலையில் வைக்கப்பட்டுள்ள 15க்கும் மேற்பட்ட விளம்பர பதாகைகள் கிழிந்தும் சாலையில் சாய்ந்தும் விபத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் சென்று வருகின்றனர். அதிமுகவின் பேனர் கலாச்சாரம் தங்களுக்கு உயிர் பயத்தை காட்டி வருவதாக மக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: பிரதமர் மோடியின் வருகை எதிரொலி.. திருச்சியில் இன்று முதல் 27ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை..!