பாமகவை அன்புமணியிடம் கொடுத்துவிட்டு தைலாபுரம் இல்ல கதவை சாத்திகொண்டு கொள்ளு பேரண்களை விளையாடுவதை ஏற்க முடியாது. கடைசி மூச்சு வரை பாட்டாளி மக்களுக்காக உழைப்பேன் மக்கள் தன் மேல் உயிரை வைத்துள்ளார்கள். வஞ்சனையால் சூதுவால் உறிஞ்சி எடுக்க பாமக தான் தாம் என அன்புமணி எடுத்து கொள்வேன் என்கிறார். பணத்தை வைத்து தன் மீது உயிரை வைத்திருந்த சிலரை அன்புமணி பக்கம் இழுக்கப் பார்க்கிறார்.
சட்டமன்ற உறுப்பினர் வேட்பாளர் தன்னால் தான் போட முடியும் என்று கூறுகியார் பை பையாக பொய்யை அன்புமணி கூறுகிறார். கட்சியில் அன்புமணியை எம் பி ஆக்கிய போது தன்பக்கம் இழுக்க வேண்டுமென உள் அடி வேலைகளை பார்க்க துவங்கியுள்ளார். பாமகவை ஆலமரமாக வியர்வை சிந்தி உருவாக்கியதை அதிலுள்ள கிளையை வெட்டி கோடாரி செய்து ஆலமரத்தை சாய்க்க பார்க்கிறார். பனத்தை வைத்து கொண்டு விலைக்கு வாங்கி பொய் பொய்யாக கூறினார்.
கட்சியின் வளர்ச்சிக்காக அன்புமணி எதையும் செய்யவில்லை. காசு கொடுத்து கட்சி காரர்களை பொருளை விலைக்கு வாங்குவது போல் அன்புமணி செய்கிறார். தருமபுரியில் மூத்த கட்சிக்காரர் சுப்ரமணி என்னை சந்திக்க வந்த போது அவருக்கு தருமபுரி எம்.எல்.ஏ வெங்கடேஷ், ரூ. 5 ஆயிரம் கொடுத்து தடுத்தார். இது போன்று என்னை சந்திக்க வருபவர்களை சந்திக்க விடமால் நிறைய வேலைகளை செய்து வருகின்றனர். ஆனால் ஒகே எஸ் அந்த பணத்தை எம்.எல்.ஏ முகத்தில் வீசி விட்டு என்னை சந்தித்தார்.
இதையும் படிங்க: பாட்டாளி சொந்தங்கள் என்னை கடவுளா பாக்குறாங்க! அன்புமணி சொல்றது எல்லாமே பொய்.. ராமதாஸ் பரபரப்பு பேட்டி..!
இதையும் படிங்க: அன்புமணி தலைவரே கிடையாது! பொதுக்குழுவுக்கு தடை கோரி ராமதாஸ் தரப்பு ஐகோர்ட்டில் மனு...