பொருட்களை கொரியர் அனுப்பி பார்த்திருப்போம். மனிதர்களை கொரியரில் அனுப்பி பார்த்திருக்கிறீர்களா? அதுவும் சொந்த தந்தையையே கொரியரில் அனுப்பிய மகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் கொரியர் செய்வதற்காக ஒரு மூட்டையை எடுத்துச் சென்றுள்ளார்.
அந்த மூட்டையை பார்த்து சந்தேகப்பட்ட ஊழியர்கள் மூட்டைக்குள் என்ன இருக்கிறது என்று கேட்டுள்ளனர். அதற்கு முறையாக பதிலளிக்காததால் மூட்டையை திறந்து ஓடியவர்கள் பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அந்த மூட்டையில் இருந்து ஒரு வயதான நபர் எழுந்து வந்துள்ளார். மனிதர்களை எல்லாம் கொரியர் அனுப்ப முடியாது என்றும் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் கொரியர் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதைக் கூட செய்ய முடியாதா என்றும் தனது தந்தையை வேறு கொரியர் நிறுவனத்திற்கு செல்லலாம் வா என்று அந்த பெண் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. உடனடியாக கொரியர் நிறுவன ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த குடும்பத்தினரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: பூதாகரமாகும் கேஸ் தட்டுப்பாடு பிரச்சனை..!! பெங்களூருவில் ஒரே நாளில் 25% ஓட்டல்கள் மூடல்..!!
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. ரீல்ஸ் எடுப்பதற்காக தந்தையை மூட்டை கட்டி கொரியரில் அனுப்ப முயன்றதாக அவர்கள் கூறியதாக தெரிகிறது. பண்டிகை நேரங்களில் பேருந்து உள்ளிட்டவற்றின் கட்டணம் அதிகமாக இருப்பதை எடுத்துக் கூறுவதற்காக இந்த ரீல்ஸ் எடுப்பதற்கு முயன்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் தொடர்ந்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர். ரீல்ஸ் மோகம் தலைக்கு ஏறியதில் தந்தையையே மூட்டை கட்டி கொரியர் அனுப்ப நினைத்த மகளின் செயல் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது.
இதையும் படிங்க: பெங்களூரில் கேஸ் தட்டுப்பாடு..!! தவிக்கும் PG-கள்..!! ஒரு வாரம் தான் சமாளிக்க முடியுமாம்..!!