தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து வந்த நிலையில் பிஎம்சி திட்டத்தில் இணையுமாறு தமிழ்நாட்டை மத்திய பாஜக அரசு வலியுறுத்தி உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு மத்திய அரசு 'பிரைம் மினிஸ்டர்ஸ் ஸ்கூல்ஸ் ஆப் ரைசிங் இந்தியா' எனப்படும், பி.எம்.ஸ்ரீ திட்டத்தை அறிமுகம் செய்தது. பிஎம்சி திட்டத்தில் மும்மொழி கொள்கை இடம் பெற்றிருந்தது. பி.எம்.ஸ்ரீ திட்டம் 2022ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின்படி நாடு முழுவதும் 14,500 பள்ளிகளை முன்மாதிரிப் பள்ளிகளாக மாற்றுவதே நோக்கமாகக் கொண்டது. இருப்பினும், இது இந்தியை திணிக்கும் திட்டம் என கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த திமுக அரசு திட்டத்தை ஏற்க முடியாது என்றும் அறிவித்தது. இதனால் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய சுமார் 3500 கோடி ரூபாய் கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தியது. ஆனால், கேரளா உட்பட பல்வேறு மாநிலங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்தி உள்ளன.
இந்த சூழலில் பிஎம்சி திட்டத்தில் இணையுமாறு தமிழ்நாடு, மேற்கு வங்க தலைமை செயலாளர்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய அரசு அமைய உள்ள சூழலில், நிறுத்தி வைக்கப்பட்ட நிதியைப் பெறவும், திட்டத்தை அமல்படுத்தவும் ஏதுவாகப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது புதிய கல்விக் கொள்கையை ஏற்பதற்கும், மும்மொழிக் கொள்கையை அனுமதிப்பதற்கான ஒரு நிபந்தனையாகப் பார்க்கப்படுகிறது. அதனால், தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் இத்திட்டத்தில் கையெழுத்திடாமல், மத்திய அரசை எதிர்த்து வந்தன. அதன் காரணமாக, 'சமக்ர சிக்ஷா அபியான்' (Samagra Shiksha Abhiyan) திட்டத்திற்கான நிதி நிறுத்தப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்திய அரசு இத்திட்டத்தை நிதியுடன் இணைத்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் இது தேசியக் கல்விக் கொள்கையைத் திணிக்கும் முயற்சி என்று குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்கும் தவெக அரசு மும்மொழி கொள்கையை ஏற்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு! 15 எம்.எல்.ஏ-க்களுடன் புதுச்சேரி சொகுசு விடுதியில் முகாமிட்ட சி.வி.சண்முகம்!
இதையும் படிங்க: ஆளுநருடன் தவெகவினர் மீண்டும் சந்திப்பு! ஆட்சி அமைக்க உரிமை கோருவதில் நீடிக்கும் பரபரப்பு!