எடப்பாடி பழனிச்சாமி தினந்தோறும் காலை எழுந்து மாலை வரை 100 பொய் சொல்லவில்லை என்றால் அவருக்கு தூக்கம் வராது என ஆர்.எஸ்.பாரதி கடுமையாக விமர்சித்தார்.
தமிழ்நாட்டில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தினை கண்டித்து உடனடியாக கைவிடக் கோரி தமிழக முழுவதும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
இதனைத் தொடர்ந்து திருவள்ளூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்,
இதையும் படிங்க: பட்டாக்கத்தி TO வெடிகுண்டு... அதல பாதாளத்தில் சட்டம் ஒழுங்கு... விளாசிய EPS...!
அப்போது பேசிய அவர், ஒன்றிய மோடி அரசு 37 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று ஆட்சிக்கு வந்துள்ளதாகவும்அதில் 10% வாக்குகள் திருடப்பட்டு உள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், அதே முறையை கையாண்டு தமிழ்நாட்டிலும் ஆட்சியைப் பிடிக்க பாஜக முயன்று வருவது கண்டிக்கத்தக்கது என்றார்
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், எஸ்.ஐ.ஆர் அறிவிப்பு வெளியான உடனே தமிழக முதலமைச்சர் கண்டனம் தெரிவித்து எஸ்.ஐ.ஆர் வாபஸ் வாங்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியதாகவும், தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளின் கருத்துக்களை கேட்டு எஸ்.ஐ.ஆர் ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாகவும் கூறினார்.
அதுமட்டுமின்றி கூட்டணி கட்சியினரும் தனித்தனியாக எஸ்.ஐ.ஆரை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் தாக்கல் செய்துள்ளதால் நிச்சயம் வெற்றி பெறும் என அவர் கூறினார்
டெல்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு துரதிஷ்டவசமானது என்றும், கரூர் கூட்ட நெரிசில் விபத்தில் சிக்கிய இடத்தில் செந்தில் பாலாஜி சென்று சந்தித்ததை அரசியல் நோக்கம் கற்பித்த எடப்பாடி பழனிச்சாமி,நயினார் நாகேந்திரன். டெல்லியில் கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா 20 நிமிடங்களில் எப்படி சென்றார் இந்த சந்தேகத்திற்கு எல்லாம் எடப்பாடி பழனிச்சாமி பதில் சொல்ல வேண்டும் என்றார்
இறந்தவர்கள் மற்றும் வீடு மாறியவர்களின் வாக்குகளை கள்ள வாக்காக பயன்படுத்த முடியாது என்பதால் திமுக எஸ்.ஐ ஆரை எதிர்ப்பதாக எடப்பாடி பழனிச்சாமி கேள்விக்கு பதில் அளித்த அவர், எடப்பாடி பழனிச்சாமி தினந்தோறும் காலை எழுந்து மாலை வரை 100 பொய் சொல்லவில்லை என்றால் தூக்கம் வராதுஎன விமர்சித்தார்
அதிமுக வாக்குகளும் பறிபோக கூடாது என்பதற்காக தான் எஸ்.ஐ .ஆர் எதிர்ப்பதாகவும், எஸ் ஐ ஆர் கண்டித்து நீதிமன்றம் சென்று இருப்பதாலும் மக்கள் மத்தியில் போராட்டத்தை முன்னெடுத்து இருப்பதால் இவை வெற்றி பெறும் நம்பிக்கை உள்ளதாக அவர் கூறினார்
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டணி கட்சி சேர்ந்தவர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கொடநாடு வழக்கு... சிபிஐ விசாரணை கோரும் செங்கோட்டையன்..! தீவிர ஆலோசனை...!