தெலங்கானா மாநிலம் நாகோலை சேர்ந்த விஸ்வநாத்சாரிக்கு 2024 ஆண்டு டிசம்பர் 7ம் தேதி குஜராத்தைச் சேர்ந்த பிரகாஷ் மோதிபாய் பிரஜாபத் (30) மற்றும் பிரக்னேஷ் கீர்த்திபாய் பிரஜாபத் (28) ஆகியோர் தொழிலில் முதலீடு செய்தால் கூடுதல் பணம் தருவதாகக் கூறினர். ரூ.50 லட்சம் முதலீடு செய்தால் கூடுதலாக 10 லட்சம் தருவதாக அவர்கள் உறுதியளித்தனர். இதனை நம்பி விஸ்வநாத் அவர்களுக்கு ரூ.50 லட்சம் கொடுத்தார்.
பணத்தை பெற்று கொண்டவர்கள் 10 லட்சம் லாபம் தருவதாகவும், ஆர்.டி.ஜி.எஸ். மூலம் மொத்தம் ரூ.60 லட்சத்தை வங்கிக் கணக்கிற்கு அனுப்புவதாக சொன்னவர்கள் ஆனால் திரும்ப வரவில்லை.
சந்தேகமடைந்த விஸ்வநாத் உடனடியாக போயின்பள்ளி போலீசில் புகார் அளித்தார். போலீசார் மோசடி வழக்குப் பதிவு செய்து, பணத்தை எடுத்துச் சென்ற குற்றவாளிகள் மீது கண்காணிப்பு வைத்தனர். இந்தநிலையில் அவர்கள் ஐதராபாத் வருகிறார்கள் என்ற தகவலின் பேரில் போலீசார் அவர்களை பிடிக்க திட்டம் தீட்டினர்.
அவர்கள் ஷாமிர்பேட்டையில் இருந்து புறநகர் சுற்றுச்சாலை வழியாக ஐதராபாத்தை கடந்து சென்றதை கவனித்த போலீசார் அவர்களின் காரைத் சேசிங் செய்தனத். இறுதியாக, குற்றம் சாட்டப்பட்டவர்கள் 125 கிலோ மீட்டர் சேசிங் பிறகு மஹபூப்நகர் மாவட்டத்தில் பிடித்தனர். பின்னர் காரில் சோதனையின் போது இருக்கைகளுக்கு அடியில், கார் டோர்களில் , ஸ்டெப்னி டயரில் ரகசியமாக வைத்து கடத்தி செல்ல முயன்ற மொத்தம் ரூ.4.50 கோடி ஹவாலா பணம் இருப்பது கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: மதுரை: புதிய மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர்..!! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!
மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை துரத்தும்போது ஹவாலா பணம் கடத்தல் வழக்கு தெரியவந்தது. இதனையடுத்து இருவரை போலீசார் கைது செய்ததாக வடக்கு மண்டல காவல் துணை ஆணையர் ரஷ்மி பெருமாள் தெரிவித்தார். இந்தப் பணம் நாக்பூரிலிருந்து பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் வருமான வரி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். ஹவாலா பணத்தையும் குற்றம் சாட்டப்பட்டவர்களையும் புத்திசாலித்தனமாகப் பிடித்ததற்காக போயின்பல்லி போலீசாரை டிசிபி ரஷ்மி பெருமாள் பாராட்டினார்.
இதையும் படிங்க: அசிம் முனீருக்கு உச்சபட்ச அதிகாரம்! பாக்., முப்படைகளின் தலைவராக நியமனம்! இந்தியாவுக்கு காத்திருக்கும் ஆபத்து!