• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை... திமுகவை தோற்கடிக்க அதிமுகவுக்கு வழிகாட்டும் சைதை துரைசாமி

    ஒற்றுமையுடன் கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்ல மத்திய பா.ஜ.க கட்சியோடு இணைந்து பலமான கூட்டணி அமைத்து இந்தத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும்.
    Author By Thiraviaraj Wed, 02 Apr 2025 19:19:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Saidai Duraisamy guides AIADMK to defeat DMK

    ''அதிமுகவினர் ஒன்றுபடவேண்டும். பாஜகவுடன் கூட்டணி வைக்கவேண்டும். திமுகவை வீழ்த்தவேண்டும்'' என்று சைதை துரைசாமி வேண்டுகோள்விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''9-ஆம் வகுப்பு படிக்கின்றபொழுதே பேனா நண்பர்கள் வட்டத்தை உருவாக்கி எம்.ஜி.ஆரின் கொள்கைகளைக் கடைப்பிடித்து இன்றுவரை அதிமுகவின் அடித்தளத்தொண்டன் என்பதிலும், அண்ணா தி.மு.கவின் முதல் தியாகி என்பதிலும் பெருமை கொண்டவன். பதவிக்காகவும் ஆதாயத்துக்காகவும் நான் அதிமுகவில் இல்லை என்பதை என்னுடன் தோளுக்குத்தோள் இணைந்து கட்சிப்பணி செய்த சகாக்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்கு தெரியும்

    . ADMK

    புரட்சித்தலைவர் மறைவுக்குப் பிறகு ஜா. அணி ஜெ. அணி இணைப்புக்கும் புரட்சித்தலைவி மறைவுக்குப் பிறகு சகோதரர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இணைப்புக்கும் என எல்லா காலகட்டத்திலும் அண்ணா தி.மு.க. ஒற்றுமைக்குப் பணியாற்றிருக்கிறேன் என்ற தகுதியில் தான் கட்சி நிர்வாகிகளுக்கு இன்று அதிமுக-வுக்கு சில ஆலோசனைகள் சொல்ல விரும்புகிறேன். 

    இதையும் படிங்க: “அதிமுக வேண்டாம்; அண்ணாமலை தான் வேணும்” - பாஜக தொண்டர்கள் பார்த்த உள்ளடி வேலை...!

    1. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பெரும்புகழை மேடைகளில் பேசுவது, சுவரொட்டி மற்றும் பேனர்களில் பெரிய அளவில் முதன்மைப்படுத்துவது. 2. பிரிந்து கிடக்கும் அதிமுக வினரை ஒற்றுமைப்படுத்துவது  3. பா.ஜ.க மற்றும் தோழமைக் கட்சிகளை ஒருங்கிணைத்து பலமான கூட்டணி அமைத்து திமுகவை வீழ்த்துவது. 

    அண்ணா திமுகவின் குலதெய்வம் புரட்சித்தலைவர். அந்தக் குலதெய்வத்தின் கொள்கை வழி நின்று அவரது புகழை, சிறப்பை இன்னும் அதிகமாக முதன்மைப்படுத்த வேண்டும். திரைப்படத்தில் சொன்ன கருத்துக்களை எல்லாம் ஆட்சியில் செய்துகாட்டியவர். இன்றுவரை மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருக்கிறார். அராஜகம், அரசியல் கொள்ளை, ஊழல் போன்றவைகளிலிருந்து தமிழகத்தை மீட்டு, மீண்டும் மக்களுக்கு நல்லாட்சி கொடுக்கவேண்டும். கட்சியின் தொண்டர்களை 1972-ல் உற்சாகமாகப் பணியாற்றிய, அந்த பழைய நிலைக்கு கொண்டுசெல்ல வேண்டும். 

    ADMK

    கட்சிக்கு ஏன் இந்த தொடர் தோல்விகள், தொண்டனுக்கு ஏன் இந்த சோர்வு, இந்த தோல்வியை எப்படி தவிர்க்கலாம் என்று சிந்தித்தால் கட்சியின் ஒற்றுமை, கூட்டணி பலம் ஆகியவற்றின் தேவை புரியும். தொண்டர்களையும், பொதுமக்களையும் ஒருங்கிணைத்து வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல புரட்சித்தலைவர் மேற்கொண்ட சில அரசியல் முடிவுகளை நினைவூட்ட விரும்புகிறேன்.1. மத்திய அரசுடன் நட்போடு பழகி தேர்தலில் கூட்டணி அமைத்தே தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். 

    2. இந்திராகாந்தி அம்மையார் தஞ்சாவூர் இடைத்தேர்தலில் போட்டியிட கூட்டணி கட்சியான அண்ணாதிமுக அனுமதி கொடுக்காததால் உறவு முறிந்தது. பிறகு நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸுடன் தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் அண்ணாதிமுக 2 இடங்களை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தது. 

    ADMK

    3. இந்திராகாந்தி அம்மையார் மீண்டும் பிரதமரானார். தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் ஆட்சி கலைக்கப்பட்டது. தேர்தல் பிரச்சாரத்தில் மக்களிடம் சென்று, என்ன தவறு செய்தேன் என் ஆட்சியை கலைத்தார்கள்? தீர்ப்பளியுங்கள்' என்று வேண்டுகோள் விடுத்தார். மீண்டும் எம்.ஜி.ஆர் மாபெரும் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தார். 

    4. அதன் பிறகு, காங்கிரஸுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து திமுக-வை தனிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். 5. அதன் அடையாளமாக திருப்பத்தூர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணி வேட்பாளரான அருணகிரிக்கு தானே வலியச் சென்று ஆதரவு கொடுத்தார். 
    7. தி.மு.க கூட்டணியை பிரிக்கவேண்டும் என்பதற்காக காங்கிரசுக்கு பிரச்சாரம் செய்து வெற்றிபெற வைத்தார். இது அன்றைய அரசியலில் மிகப்பெரிய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. மத்திய அரசுடன் நல்ல நட்பு உருவானது. 

    8. 1984-ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் உடல்நலம் பாதித்திருந்தபோது இந்திராகாந்தி அம்மையார் நேரடியாக வந்து பார்த்து. அவர் வெளிநாட்டில் உயர்தரச் சிகிச்சை பெறுவதற்கு தேவையான வசதிகளை செய்து தந்தார். 1984-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அண்ணா திமுக காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அண்ணா திமுக-வுக்கு நெருக்கடிகள் ஏற்பட்டபோது மத்திய அரசின் உதவிகள் பெருமளவு பயன்தந்தது.

     ADMK

    இப்படி அரசியல் முடிவுகள் எடுக்கின்றபோது கட்சி நலன், மக்கள் நலன், தொண்டர்கள் நலன் என்ற வகையில் எம்.ஜி.ஆரின் அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும். எம்.ஜி.ஆர் மத்திய அரசோடு எப்போதும் மோதல் போக்கை கடைப்பிடிக்கமாட்டார். இந்த அணுகுமுறைகளைக் கடைப்பிடித்தால் கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லலாம். கூடிவாழ்ந்தால் கோடி நன்மை... குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை... மறப்போம், மன்னிப்போம்... 

    எனவே, ஒற்றுமையுடன் கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்ல மத்திய பா.ஜ.க கட்சியோடு இணைந்து பலமான கூட்டணி அமைத்து இந்தத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும். 2026 தேர்தலில் தோல்வி அடைந்தால் கட்சியைக் காப்பாற்ற முடியாது என்று ஒவ்வொரு அடிமட்டத் தொண்டர்களும் வருத்தப்பட்டு, 'இந்தக் கருத்துகளை கட்சி நிர்வாகிகளிடம் எடுத்து சொல்லி மாற்றுவதற்கு முயற்சி எடுக்க மாட்டீர்களா?" என்று கேட்கிறார்கள். அவர்களின் ஆதங்கத்தையே இந்த அறிக்கையில் வெளிப்படுத்தியிருக்கிறேன்.

     ADMK

    புரட்சித்தலைவரை முதன்மைப்படுத்துங்கள். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவியின் விசுவாசிகளையும் திமுக எதிர்ப்பாளார்களையும் ஒற்றுமைப்படுத்துங்கள். பா.ஜ.க மற்றும் தோழமைக் கட்சிகளையும் இணைத்து 2026-ல் பலமான வெற்றி கூட்டணி அமைத்து கட்சியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
     
    இதையும் படிங்க: அண்ணாமலைக்கு எதிராக ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக... சிவகங்கையை அதகளப்படுத்திய எடப்பாடியின் ர.ர.க்கள்...!

    மேலும் படிங்க
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்
    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அரசியல்
    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    அரசியல்
    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    இந்தியா
    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    உலகம்
    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share