தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு தனது முதல் பரப்புரையை சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் தொடங்க திட்டமிட்டிருந்தார். இன்று பெரம்பூரில் நடைபெற இருந்த இந்த பரப்புரை நிகழ்ச்சிக்கு முன்னதாக, மார்ச் 26 அன்று தவெக சார்பில் சென்னை மாநகரக் காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டது. நிகழ்ச்சி திட்டமிடப்பட்ட இடம் பெரம்பூர் தொகுதியில் உள்ள முல்லை நகர் சந்திப்பு அல்லது அதனை ஒட்டிய பகுதியாக இருந்தது.
ஆனால், நிகழ்ச்சிக்கு ஒரு நாள் முன்பாகவே, அதாவது மார்ச் 27 அன்று, அந்த இடத்தில் திடீரென பள்ளங்கள் தோண்டப்பட்டதாகவும், இரும்புத் தடுப்புகள் வைக்கப்பட்டதாகவும் தவெக தரப்பில் கூறப்பட்டது. இந்த திடீர் மாற்றங்கள் எங்கிருந்து வந்தன என்று கேள்வி எழுப்பப்பட்டது.

விஜய் பிரச்சாரத்திற்கு தொடர்ந்து இடையூறு கொடுக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் விஜய்க்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். விஜய் தற்போது அனுபவிப்பதை கடந்த 15 ஆண்டுகளாக தான் அனுபவித்து வருவதாக சீமான் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆதவிற்கு எதிராக களமிறங்கும் திமுக MLA மகன்...! எதிர்ப்பார்ப்பை தூண்டிய வில்லிவாக்கம் தொகுதி..!!
மக்கள் நடமாட்டமே இல்லாத இடத்தில் தான் எனக்கு அனுமதி அளிக்கிறார்கள் என்றும் விஜய் தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்க வேண்டிய அவசியம் இல்லையே எனவும் சீமான் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பொங்கலுக்கு குஜராத்தில் இருந்து அரிசி வெள்ளம் வாங்க வேண்டியது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். இங்கு இருக்கும் விவசாயத்தை பார்க்காமல் வெளிமாநிலத்தில் இருந்து குறைந்த விலைக்கு பொருட்களை வாங்கி வந்து கொடுப்பதாக தெரிவித்தார். காஞ்சிபுரம் பட்டுக்கே மதிப்பு இல்லாமல் போய்விட்டது என்று சீமான் கூறினார்.
இதையும் படிங்க: தமிழகமே எதிர்பார்த்த கேள்வி...!! - “விஜய் வந்தா ஓட்டு போயிடும்...” - அடித்துச் சொன்ன அமித் ஷா...!