திமுகவின் உறுப்பினர் சேர்க்கை ஏமாற்று வேலை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். இதுக்குறித்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2026 சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும். ஓரணியில் தமிழ்நாடு என்று திமுகவினர் அழைக்கிறார்கள். மகளிர் உரிமைத்தொகையை முதல் 27 மாதம் எந்த மகளிருக்கும் கொடுக்கவில்லை.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடுத்த அழுத்தத்தின் அடிப்படையிலும், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியதன் காரணமாகவே கொடுத்தார்கள். இப்போது 2026 சட்டமன்ற தேர்தல் வருவதால் மகளிர் உரிமைத்தொகைக் தளர்வு செய்துள்ளார்கள். 2026 தேர்தலில் இது எடுபடாது, அதற்கான ரிசல்ட் "பூஜ்ஜியம்" தான். திமுக மக்களை தேடி செல்வதும் பூஜ்ஜியம் தான்.
இதையும் படிங்க: மதுரை மேற்கில் சூரியன் மறையும்... மறைமுகமாக திமுகவை தாக்கிய செல்லூர் ராஜூ!!

உறுப்பினர் சேர்க்கையும் ஏமாற்று வேலை தான். சாத்தான்குளம் வழக்கில் எவ்வளவு போராட்டம் செய்தார்கள். திருப்புவனம் நிகழ்வு அதைக்கட்டிலும் மோசமான செயல் இது. திருப்புவனம் வழக்கை வெளியில் கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி தான். திமுக கூட்டணி கட்சிகளின் மௌனத்தை மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள்.

2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முதல்வராவார். அதிமுகவை எந்த கொம்பனலும் அபகரிக்க முடியாது என்றும் 2026 சட்டமன்ற தேர்தலில் அறுதி பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்லிவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மதுரை மேற்கு தொகுதி யாருக்கு? செல்லூர் ராஜு மழுப்பியதால் ஏற்பட்ட குழப்பம்!!